அசீமை மொத்தமா தூக்கி உள்ளே விட்டும் ஒண்ணுமே நடக்கலையே.. என்ன தனலட்சுமி இப்படி புலம்புறாரு?

சென்னை: அசீமை மொத்தமாக தூக்கி உள்ளே விட்ட நிலையிலும், ஒரு பொருளை கூட எடுக்காமல் அசீம் ஏமாற்றிவிட்டார் என கோபத்தில் பொங்கி எழுந்த தனலட்சுமி அந்த ஒரு நிமிடம் சந்திரமுகியாகவே மாறிவிட்டார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 32 நாட்களை கடந்து வெற்றிகரமாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட்டை போலவே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேரம் ஓடி வருவதால் ரசிகர்கள் எக்ஸ்க்ளூசிவ் ஆக யார் சரி, யார் செய்வது தவறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டு விளாசி வருகின்றனர்.

லட்டுல வச்சேன் நினைச்சியா

லட்டுல வச்சேன் நினைச்சியா

ஸ்வீட் டாஸ்க் கொடுத்த நிலையில், செம ஜாலியா சாப்பிட்டு என்ஜாய் பண்ணலாம் என நினைத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம பல்பாக பிக் பாஸ் லட்டுல வச்சேன்னு நினைச்சியா நட்டுல வைத்தேன் என்பது போல கன்வேயர் பெல்ட்டை உள்ளே கொண்டு வந்து போட்டியாளர்களின் பெண்டை நிமிர்த்தி வருகிறார். பிசிக்கல் டாஸ்க் பக்காவாக இருக்கணும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த சீசன் செம வேட்டை என்றே சொல்லலாம்.

அசீமை தூக்கி உள்ளே விட்டு

அசீமை தூக்கி உள்ளே விட்டு

கன்வேயர் பெல்ட் வழியாக பொருட்கள் வரும் நிலையில், எதிர் டீம் அந்த பொருளை எடுப்பதற்கு முன்பாக நாம எடுத்து விட வேண்டும் என்கிற வெறியால், அசீமை தூக்கிக் கொண்டு அதன் உள்ளேயே விட்டதை பார்த்த ரசிகர்கள் என்னவொரு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் ஆனாலும், அசீம் ஒன்றுமே எடுக்கவில்லையே என கூறி வருகின்றனர்.

தண்டம் ராம்

தண்டம் ராம்

அசீமுக்கு முன்னதாக ராம் ராமசாமியை உள்ளே அனுப்பியதும் தப்பு, இப்போ அசீமை உள்ளே அனுப்பியதும் தப்பு என தனலட்சுமியே ஃபீல் செய்யும் அளவுக்கு இந்த டீம் ரொம்பவே வீக்காக விளையாடி வருகிறது. சொந்த டீமே நமக்கு சூன்யம் வைக்கின்றனர் என ரொம்பவே ஃபீல் பண்ணி தனா பேசியதை 2வது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர்.

ஏமாற்றினாரா அசீம்

ஏமாற்றினாரா அசீம்

தன்னை பழிவாங்கவே அசீம் இப்படி ஒரு பொருளை கூட எடுக்கவில்லையா? முதலை வாய்க்குள்ள தலையை விட்ட கதையாகிடுச்சே என அமுதவாணனிடம் தனலட்சுமி புலம்பும் அட்டகாசமான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. மணிகண்டன் உடன் சண்டை போட்ட தனா தற்போது அவர் எடுக்கவே ஈசியாத்தான் இருந்தது அதான் எடுத்தேன் என சொல்லியதும் அசீம் டபுள் கேம் ஆடுகிறாரா? என யோசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X