எங்கம்மாவை இதைவிட கேவலமாலாம் பேசியிருக்கேன்.. சோக கதையால் அனைவரையுமே அழ வைத்த தனலட்சுமி!

சென்னை: சோக கதை சொல்லும் டாஸ்க்கில் யாருடைய சோக கதை சிறப்பா இருக்கு, இல்லை என்பதை அறிய கடந்த சீசனிலேயே மார்க் எல்லாம் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை ஒரு படி மேல் சென்று பஸர் அடித்து அவர்கள் பேச்சையே நிறுத்தும் பவர் கொடுக்கப்பட்டது.

ஜனனி பேசும் போதெல்லாம் ஓடிச் சென்று பஸர் அடித்தார் தனலட்சுமி. ஆனால், அவர் பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அழுத சீனை அன்சீன் புரமோவில் வெளியிட்டுள்ளனர்.

அதிகரிக்கும் ஓட்டுக்கள்

அதிகரிக்கும் ஓட்டுக்கள்

ஜிபி முத்துவுக்கு எதிராக சண்டைப் போட்ட தனலட்சுமி தொடர்ந்து தில்லாக விளையாடி வருவதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு சாதகமாக ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் தனலட்சுமிக்கு ஆதரவாக ரசிகர்கள் கணிசமாக திரண்டு வருகின்றனர். இந்நிலையில், சோக கதை டாஸ்க்கில் தனலட்சுமி பேசிய பேச்சு அன்சீன் புரமோவாக வெளியாகி உள்ளது.

டிக் டாக் பிரபலம்

டிக் டாக் பிரபலம்

டிக் டாக் மூலம் வீடியோக்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. இந்த சீசனில் மக்களில் இருந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் பங்கேற்கலாம் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், விண்ணப்பித்த 20 ஆயிரம் பேரில் தனலட்சுமி மற்றும் ஷிவின் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில், டிக் டாக் பண்ணுவதற்காக தனது அம்மாவை தான் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினேன் என தனலட்சுமி பேசியதை கேட்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கண் கலங்கினர்.

இரவெல்லாம் மொபைல் பிடிப்பார்

இரவெல்லாம் மொபைல் பிடிப்பார்

வித விதமான கெட்டப்புகளை போட்டு டிக் டாக் வீடியோ பண்ணுவேன், என்னுடைய அம்மா இரவெல்லாம் எனக்காக மொபைல் பிடித்து வீடியோ எடுப்பார். அவர் சரியாக வீடியோ எடுக்கவில்லை என்பதற்காக எல்லாம் ரொம்பவே மோசமாக அவரை திட்டி உள்ளேன். ஆனால், இப்போ இங்கே வந்து பார்த்தபோது தான் தெரிந்தது, பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று, என அவர் ஃபீல் பண்ணியதும் மற்ற ஹவுஸ்மேட்களும் ஃபீல் செய்து அழுதனர்.

ரெட் பஸர் அடிக்கவில்லை

ரெட் பஸர் அடிக்கவில்லை

தனலட்சுமி தனது எதார்த்தமான கதையை சொல்ல ஆரம்பித்த நிலையில், அவர் கண் கலங்கிய படியே பேசியது சக போட்டியாளர்களை ஃபீல் செய்ய வைத்தது. யாருமே எழுந்து போய் அவருக்கு ரெட் பஸரை அடித்து ஆஃப் செய்தது போல் தெரியவில்லை. அடுத்த வாரம் நேரடி நாமினேஷனில் இருந்து தனலட்சுமி தப்பிப்பார் என்றே தெரிகிறது.

அன்சீனில் எதற்கு

அன்சீனில் எதற்கு

அசீமின் சோகக் கதையை முதல் புரமோவாக போட்ட விஜய் டிவி, இரண்டாவது புரமோவில் ஜனனி பேசியதையும் மூன்றாவது புரமோவில் நடன போட்டி குறித்தும் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனலட்சுமியின் இந்த வீடியோவை ஏன் அன்சீனில் வெளியிட்டீர்கள் என பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்ட பிரபலங்களே கொதித்தெழுந்து கேள்வி கேட்டு தனலட்சுமிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X