Asal Kolaar Evicted: ஆடாத ஆட்டமெல்லாம் போட்ட அசல் கோலார்.. கதறி அழுது டாட்டா காட்டிய நிவாஷினி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அசல் கோலார் தான் வெளியேறுவார் என ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் மூலம் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அசல் கோலார் தான் எவிக்ட் ஆகி வெளியேறி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
போன வாரத்தை விட இந்த வாரம் அசல் கோலார் ஆட்டம் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகமாக இருந்தது.
நிவாஷினி, குயின்ஸி என பெண் போட்டியாளர்களை கடிப்பது, கட்டிப் பிடிப்பது, கால் போடுவது என

ஜோர்த்தால புகழ்
ஜோர்த்தாலயா.. ஜோர்த்தால எனும் கானா பாடல் மூலம் பிரபலமானவர் அசல் கோலார். கடந்த சீசனில் கானா பாடகி இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை போலவே இந்த சீசனில் அசல் கோலார் கலந்து கொண்டார். பையன் கடைசி வரைக்கும் இருந்து இசை கச்சேரி பண்ணுவார் என பலரும் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நிலையில், அசல் கோலார் வேற கச்சேரி நடத்த ஆரம்பித்த நிலையில், ரசிகர்கள் அவருக்கு ஓட்டே போடவில்லை.

ஓடவிட்ட ரசிகர்கள்
இது ஒன்றும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை.. பார்ப்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அடக்கி வாசிக்க வேண்டும் என நினைத்த பிக் பாஸ் ரசிகர்கள் அசல் கோலாருக்கு ஓட்டே போடாமல் இந்த வாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டதில் இருந்தே குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்திலிருந்து வந்தார். இந்நிலையில், அந்த சம்பவம் அரங்கேறி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

அசல் கோலார் எவிக்டட்
பெண் போட்டியாளர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் அசல் கோலாரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், எவிக்ஷன் கார்டுடன் வந்த கமல் அசல் கோலார் தம்பி நீங்க பண்ண கோளாறு எல்லாம் போதும், வெளியே போங்க என எவிக்ட் செய்து அனுப்பி விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் சந்தோஷம்
டபுள் எவிக்ஷன் வைத்து அசீமை வெளியேற்றவில்லை என்றால் கூட இந்த அசல் கோலாரை முதலில் துரத்தி விட்டதே ரொம்ப நல்லது என விவரம் அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். நாளை அசல் கோலார் வெளியேறும் காட்சிகளை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டிப்பிடித்து அழுத நிவா
மற்ற பெண் போட்டியாளர்கள் அசல் கோலாரை அடிக்காத குறையாக முறைத்து வந்த நிலையில், அசல் கோலாரிடம் ரொம்பவே நெருக்கமாக பழகி வந்த நிவாஷினி அசல் கோலார் எவிக்ட் ஆனதை அறிந்ததும் கட்டிப்பிடித்து அழுது அவருக்கு டாட்டா காட்டிவிட்டு அடுத்த நண்பரை தேடி நகர்ந்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











