இந்த வாரம் கமல் கிட்ட அப்படி வறுபட்ட ஷெரினா.. இந்த சூப்பர் ஹிட் படத்துல நடிச்சிருக்காங்களா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 3 வாரங்களாக வெற்றிகரமாக பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த முறை பிக் பாஸ் டீம் பக்காவாக முதலிலேயே ஜிபி முத்துவை வெளியேற்றி, அசீம், அசல் கோலார் லீலைகளை வெளிக்காட்டி நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி உள்ளனர்.

இந்த வாரம் கமல் பட்டாசாக வெடித்துத் தள்ளிய ஷெரினா ஏற்கனவே தமிழ் சினிமா நடிகை தான் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

மாடல் அழகி

மாடல் அழகி

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷெரினாவுக்கு 34 வயதாகிறது. பிக் பாஸ் வீட்டில் மலையாளத்தில் ரகசியமாக ஆயிஷாவிடம் பேசி வரும் ஷெரினா பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான் என்கின்றனர். 1988ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த ஷெரினா இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்று விளையாடி வருகிறார்.

டிராமா குயின்

டிராமா குயின்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஷெரினா தான் ஒரு சரியான டிராமா குயின் என்பதை நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். கமல்ஹாசனும் சனிக்கிழமை எபிசோடில் ஷெரினாவை சரவெடி வெடிப்பது போல வெடித்து தள்ளி விட்டார். இன்னைக்கும் ஷெரினாவுக்கு பிற மொழியில் பேசியதற்காக பெரிய டோஸ் காத்துக் கொண்டிருக்கிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார்

சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார்

மாடல் அழகியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் ஷெரினா ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், பலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அவர் என்ன படத்தில் நடித்துள்ளார் என்று சொன்னால் உடனடியா அந்த படத்திலா? என ஆச்சர்யப்படுவீர்கள்.

விநோதய சித்தம்

விநோதய சித்தம்

சமுத்திரகனி இயக்கி நடித்த விநோதய சித்தம் படம் ஜி5 ஓடிடியில் வெளியானது. அந்த படத்தில் தான் தம்பி ராமைய்யாவின் மகனின் மனைவியாக நடித்து இருப்பார் நம்ம பிக் பாஸ் பிரபலம் ஷெரினா. அதன் பின்னர் பல படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த அந்த ஓடிடி குயினுக்கு படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

படக்குழுவுடன்

படக்குழுவுடன்

சமுத்திரகனி, தம்பி ராமைய்யா மற்றும் படத்தில் நடித்த நடிகர்களுடன் ஷெரினா எடுத்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல வருடங்களாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வரும் இவர் பிசினஸ் பெண்மணியாகவும் சில நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X