அமுதவாணன் இவ்ளோ மோசமானவரா.. பெண் குளிப்பதை அந்த ஓட்டை வழியே ஏன் பார்க்கணும்.. விளாசும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டின் பாத்ரூம் ஓட்டை வழியே அமுதவாணன் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிய நிலையில், பல ரசிகர்கள் அமுதவாணனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட மோசமான நபரை இனியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது என ரசிகர்கள் உடனடியாக அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பணும் என்கிற கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.

பாத்ரூமுக்குள் ஜனனி குளித்துக் கொண்டிருந்தாரா? இல்லை ஷிவின் குளித்துக் கொண்டு இருந்தாரா? அமுதவாணனின் செயலை உடனடியாக பிக் பாஸ் எச்சரிக்க என்ன காரணம் என பெரும் விவாதமே வெடித்துள்ளது.

பாத்ரூம் ஏரியாவில் ரகசிய பேச்சு

பாத்ரூம் ஏரியாவில் ரகசிய பேச்சு

அமுதவாணன் பாத்ரூம் ஏரியாவில் குளித்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவருடன் ரகசியமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மைக் மாட்டாமல் ரகசியமாக அமுதவாணன் அப்படி யாருடன் பேசினார் என்கிற கேள்வியும் பேசிக் கொண்டே அமுதவாணன் செய்த அந்த செயல் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓட்டை வழியே

ஓட்டை வழியே

பாத்ரூமுக்குள் யாரோ குளித்துக் கொண்டிருக்க அவருடன் டோருக்கு இந்த பக்கமாக இருந்தபடி பேசி வந்த அமுதவாணன் திடீரென ஓட்டை சந்தின் வழியாக முகத்தை வைத்து பேசிய காட்சிகள் ரசிகர்களை பயங்கர கோபத்திற்கு ஆளாக்கி உள்ளன. அமுதவாணன் இந்த அளவுக்கு மோசமானவரா என ரசிகர்கள் திட்டத் தொடங்கி உள்ளனர்.

ஜனனி குளித்துக் கொண்டு இருந்தாரா

ஜனனி குளித்துக் கொண்டு இருந்தாரா

அமுதவாணன் உடன் பிக் பாஸ் வீட்டில் ரொம்பவே நெருக்கமாக ஜனனி பேசி வரும் நிலையில், பாத்ரூமில் ஜனனி குளித்துக் கொண்டிருந்தாரா? அவர் குளிப்பதைத் தான் அமுதவாணன் அப்படி ஓட்டை வழியே பார்த்தாரா? என நெட்டிசன்கள் பெரிய பஞ்சாயத்தையே கிளப்பி உள்ளனர்.

ஷிவினாக இருந்தாலும் தப்பு தான்

ஷிவினாக இருந்தாலும் தப்பு தான்

ஜனனி இல்லை வெளியே இருப்பது ஷிவின் செருப்பு என சிலர் கமெண்ட் போட்டு வரும் நிலையில், ஷிவினாக இருந்தாலும் அமுதவாணன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஆண் போட்டியாளராக கூட இருக்கட்டுமே பாத்ரூமில் குளிக்கும் போது ஓட்டை வழியே பார்க்கலாமா? என கேள்வி எழுப்பி அமுதவாணனை அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

வார்ன் பண்ண பிக்பாஸ்

வார்ன் பண்ண பிக்பாஸ்

அமுதவாணனின் செயலை உடனடியாக தடுக்க நினைத்தது தான் பிக் பாஸ் அதிரடியாக மைக்கை மாட்டுங்க அமுதவாணன் எனக் கூறினார் என்றும் உடனடியாக பேய் அறைந்தார் போல அங்கிருந்து அமுதவாணன் தலை தெறிக்க ஓடிய காட்சிகளே அவர் தப்பு செய்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் விளாச காரணமாக மாறி உள்ளது.

ரெட் கார்டு கொடுங்க

ரெட் கார்டு கொடுங்க


இப்படியொரு கேவலமான போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருக்கலாமா? என்றும் பிக்பாஸ் எச்சரிக்கை கொடுக்காமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து உடனடியாக அனுப்புங்க என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உள்ளே இருந்தவருக்கு தெரியாது

உள்ளே இருந்தவருக்கு தெரியாது

வெளியே அமுதவாணன் செய்த இந்த செயல் உள்ளே பேசிக் கொண்டிருந்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அப்படியெல்லாம் அமுது ஓட்டை வழியே பார்த்திருக்க மாட்டார் என்றும் பேசுவது தெளிவாக கேட்க அந்த கேப்பில் பேசியிருப்பார் என்றும் அமுதவாணன் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X