அசீம் விளையாடினது போதும் வாங்க வண்டியில ஏறுங்க.. பறக்கும் மனநல மருத்துவமனை மீம்!

சென்னை: சக போட்டியாளர்கள் அனைவரையும் அவன் இவன் என ஒருமையிலும், வாடி போடி என எல்லை மீறியும் பேசி ஒரு சைக்கோவை போல விளையாடி வருகிறார் அசீம் என பிக் பாஸ் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும், சில ரசிகர்கள் அசீம் தான் இந்த வார கன்டென்ட் கிங்கே சண்டை போட்டே சேவ் ஆகலாம் என விளையாடி வருகிறார் என அசீமுக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது.

தனலட்சுமியை பார்த்து மனித நேயமே இல்லையா என கேட்ட அசீம் செய்யும் மனித நேய செயலுக்காக அவரை மனநல காப்பகத்தில் தான் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் போட்டுள்ள மீம் டிரெண்டாகி வருகிறது.

அசீம் அராஜகம்

அசீம் அராஜகம்

பிக் பாஸ் வீட்டில் தான் விளையாடுவது மட்டும் தான் கேம் என நினைத்து அசீம் அராஜகமாக விளையாடி வருகிறார் என்றும் தட்டிக் கேட்கும் போட்டியாளர்கள் மரியாதையுடன் பேசி வருவதால், இவர் வரம்பு மீறி வார்த்தைகளை விட்டு அவர்களை அசிங்கப்படுத்துவது போல தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்.

சனிக்கிழமை சம்பவம் இருக்கு

சனிக்கிழமை சம்பவம் இருக்கு

கிளவுன் அசீமுக்கு சனிக்கிழமை சம்பவம் இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் அசீம் அநாகரிகமாக சண்டை போட்ட வீடியோவை ஷேர் செய்து வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆனால், வெள்ளிக்கிழமையே மன்னிப்பு கேட்கும் மோடுக்கு மாறிவிடுவார் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

சிரிப்பு வருது அசீம்

சிரிப்பு வருது அசீம்

அசீம் பண்ற ஆக்‌ஷனை எல்லாம் பார்த்தால் சிரிப்பு வருது.. குயின்ஸி, ஷெரினாவை ரூட் போட இப்படியெல்லாம் வீரன் மாதிரி சண்டை போட்டு கத்தணுமா அசீம், ஒருத்தரும் உன்னை மதிக்க மாட்டாங்க.. கடந்த வாரம் ஆயிஷாவுக்காக அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்த புண்ணியாவன்களில் பலர் இப்போ அசீமுக்கு ஆதரவா என்றும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இவங்க தான் ஃபயர்

இவங்க தான் ஃபயர்

அமுதவாணன், தனலட்சுமி, விக்ரமன் இவங்க தான் இந்த மேட்டரில் செம அவங்களுக்கு ஃபயர் விடுகிறேன் என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார். ஷிவின் கூட அசீமுக்கு எதிராக சரியான சவுக்கடி கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் அவர் பேசிய பேச்சுக்களையும் எடுத்து போட்டு வருகின்றனர்.

சரி வண்டியில ஏறுங்க

சரி வண்டியில ஏறுங்க

அசீம் விளையாடினது போதும்.. சரி வண்டியில ஏறுங்க என பிக் பாஸ் சீக்கிரமே மனநல காப்பக வண்டியில் ஏற்றி அசீமை அனுப்ப போகிறார் என உச்சபட்சமாக கலாய்த்து போட்டுள்ள மீம் சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

டபுள் எவிக்‌ஷன்

டபுள் எவிக்‌ஷன்

போன வாரம் ஜிபி முத்து, சாந்தி என இருவர் வெளியே சென்றதை போல இந்த வாரம் அசல் கோலார் மற்றும் அசீமை பிக் பாஸ் வீட்டில் இருந்து டபுள் எவிக்‌ஷன் பண்ணி வெளியே அனுப்பிடுங்க பிக் பாஸ் இவங்க ரெண்டு பேரும் பேசுறதும் பண்றதும் பார்க்கவே சகிக்கல என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X