அம்மா.. எனக்கு வீட்டுக்கு போகனும்.. பாத்ரூம்ல போய் கதறுவது தான் கேமா தனா.. விளாசும் ரசிகர்கள்!
சென்னை: தலைவர் போட்டிக்கு நின்று தோற்றுப்போன நிலையில், அதனை தாங்கிக் கொள்ளாமல் வழக்கு தொடுத்துள்ள தனலட்சுமிக்கு ஆதரவாக மைனா நந்தினி மற்றும் ஷிவின் சாட்சியாக மாறவில்லை.
உடனடியாக என் கேமை இனிமே பார்ப்பீங்க என தனா சவால் விட்டதை பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அம்மா.. எனக்கு வீட்டுக்கு போகணும் என பாத்ரூமுக்கு சென்று அழுது டிராமா போடுவார். அதுதானே உன்னோட கேம் தனா என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கொயட்டா இருக்கணும்
எல்லா நேரமும் தனலட்சுமி செய்வது சரியென்று ஆகி விடாது. இந்த விஷயத்தில் அவர் கொயட்டா இருந்தாலே நல்லது என பிக் பாஸ் ரசிகர்கள் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். தலைவர் பதவி டாஸ்க்கின் போது கோல் சரியாகத்தான் போடப்பட்டது என்றும் வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஏஜென்ட் தனா
"இனிமே என் game அ எப்பிடி விளாடுறேன்னு பாரு Agent Dhanalakshmi" என தனலட்சுமி ரியாக்ஷன் உடன் செய்ததை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனின் விக்ரம் பட ஏஜென்ட் போல மாறிட்டாரே தனா என ட்ரோல் செய்து வருகின்றனர்.

தங்க தலைவி
"எங்க தங்க தலைவியின் ஆட்டம் ஆரம்பம்டா" என ஸ்மைலி எமோஜிக்களை போட்டு தனலட்சுமியின் பேச்சை ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர். இந்த வார கடைசியிலும் அழ போகிறார் தனா என்றும் இவருக்கு யாரும் ஓட்டுப் போடாதீங்க, தயவு செஞ்சு வீட்டுக்கு அனுப்புங்க.. காது வலிக்குது, தாங்க முடியல என கலாய்த்து வருகின்றனர்.

அசிங்கப்படுவதே வேலையா போச்சு
"அசிங்கப்படுவது தனலட்சுமி வேலையாக போச்சு" என போட்டோ மீம்களை போட்டு பிக் பாஸ் ரசிகர்கள் தனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன்ர. மேலும், ஷிவின் மற்றும் மைனா நந்தினி தனலட்சுமியின் திமிர் பேச்சுக்கு பக்காவாக ஆப்பு வைத்து விட்டனர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஜாலியா இருக்கு
ஹ்ம்ம்.. என்ன பண்றது.. தனலட்சுமி பேசுறத பார்க்க ஜாலியா தான் இருக்கு என கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் அம்மா பேசும் போட்டோவை போட்டு பயங்கரமாக ட்ரோல் செய்து கமெண்ட் பக்கத்தையே கலகலப்பாக ரசிகர்கள் மாற்றி உள்ளனர். அம்மா.. நான் வீட்டுக்கு போறேன்னு அழ போறீங்க.. அதுதான உங்க கேம் என்றும் வச்சு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











