நீங்க யாரு பிரதர்.. ஷிவினை பார்த்து அப்படி பேசிய அசீம்.. அறிவே இல்லையா என விளாசும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து லூஸ் டாக்ஸ் விட்டு வரும் அசீம் மீண்டும் ஒருமுறை பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார்.

யார் சொன்னாலும், கேட்க மாட்டேன் என்றும் தான் வைத்தது தான் சட்டம் என விளையாடி வருகிறார் அசீம்.

ஏற்கனவே ஷிவினை பார்த்து மோசமாக செய்கை காட்டி கமலிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட அசீம் இந்த வாரம் அதை விட மோசமாக "நீங்க யாரு பிரதர்" என பேசியது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

அனைவருடனும் சண்டை

அனைவருடனும் சண்டை

பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், தனலட்சுமி, ஷிவின், மணிகண்டா, குயின்ஸி, அமுதவாணன், ஏடிகே என ஒருத்தர் விடாமல் அனைவரிடமும் சண்டை போட்ட ஒரே ஆள் என்கிற பெயரை எடுத்துள்ளார் அசீம். இவருடன் யாரும் ஒண்ணா வாழ முடியாது என்கிற அளவுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் அசீமை ஒதுக்கி வருவதும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

அனைவரிடமும் பேசும் ஷிவின்

அனைவரிடமும் பேசும் ஷிவின்

அசீமுக்கு அப்படியே நேர் மாறாக ஷிவின் அனைவரிடத்திலும் பேசி வருகிறார். அசீம் தப்பு செஞ்சாலும் எடுத்து சொல்வதும், விக்ரமன் செய்தது சரி இல்லை என்றாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் நபராக ஷிவின் இந்த கேமை திறமையாக 50 நாட்கள் கடந்தும் விளையாடி வருகிறார்.

மோசமாக இமிடேட்

மோசமாக இமிடேட்

திருநங்கை போட்டியாளராக இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஷிவினை அனைவரும் பெண் போட்டியாளராகவே மதித்து அவருக்கு உரிய மரியாதை கொடுத்து நாகரிகமாக நடத்தி வரும் நிலையில், ஆரம்பத்திலேயே அசீம் மட்டும் ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கொடுத்த ரியாக்‌ஷன்களை பார்த்து கமல் சாரே கடுப்பாகி அசீமை கண்டித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு மோசமான விஷயத்தில் அசீம் மாட்டி உள்ளார்.

நீங்க சொல்லாதீங்க பிரதர்

நீங்க சொல்லாதீங்க பிரதர்

ஷிவினை பிக் பாஸ் வீட்டில் பலரும் சகோதரியாக பாவித்து பேசி வரும் நிலையில், அசீம் மட்டும் நீங்க சொல்லாதீங்க பிரதர் என பேசியது பிக் பாஸ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொஞ்சம் கூட அசீம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசுகிறாரா இல்லை ஷிவினை ட்ரிக்கர் பண்ண இப்படி பேசினாரா? என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அறிவு இருக்கா அசீம்

அறிவு இருக்கா அசீம்

அசீம் ஷிவினை பார்த்து அப்படி அழைத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து அறிவு இருக்கா அசீம் என்றும் கோமாளி அசீம் என்றும் கமெண்ட் போட்டுத் திட்டித் தீர்த்து வருகின்றனர். அசீமுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு வரவேற்பும் இல்லை என்றும் பி.ஆர் மூலமாகத்தான் ஓட்டுக்களை பெற்று இந்த வீட்டில் தொடர்கிறார் என்றும் விளாசி வருகின்றனர்.

வாய்த் தவறி

வாய்த் தவறி

அசீம் வேண்டுமென்றே ஷிவினை பார்த்து அப்படி சொல்லி காயப்படுத்த வேண்டுமெ ந நினைக்கவில்லை என்றும், வாய்த் தவறி அப்படி வந்திருக்கும். உடனடியாக அவர் சிஸ்டர் என்கிற டோனுக்கு சென்று விட்டார். தேவையில்லாமல் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என அசீம் ஆர்மியினர் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X