பிக் பாஸ் சீசன் 6..பெண் போட்டியாளர்கள் பட்டியல்..அப்போ அவங்க வரலையா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கும் பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று சொல்லலாம்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை 6வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பாஸில் கடந்த 5 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த சீசனில் கொரோனா தொற்றால் கமல்ஹாசன் பதிக்கப்பட்டிருந்தபோது ஒருவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன். நிகழ்ச்சியின் கடைசியில் விக்ரம் பட ஷூட்டிங்கிற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியறினார் அதன்பிறகு நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்

பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 6 வது சீசனில் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாதவர்கள் கூட கலந்து கொள்ளலாம் என விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டது.

கிராண்ட் ஓபனிங்

கிராண்ட் ஓபனிங்

இதனிடையே, விஜய் டிவியில் வரும் அக்டோபர் 9ம் தேதி மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த சீசனுக்காக பிக்பாஸ் வீடு பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. வீட்டில் நீச்சல் குளம், சன் பாத் எடுக்க வசதியாக இரு சாய்வு நாற்காலி, சிறைக்கு பதிலாக கிளிக்கூண்டு என வேறலெவலில் இருக்கிறது பிக் பாஸ் வீடு.

பெண் போட்டியாளர்கள்

பெண் போட்டியாளர்கள்

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, மெட்டி ஒலி சாந்தி, மாடல் அழகி ஆயிஷா, ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, மாடல் அழகி ஷெரீனா, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி உள்ளிட்ட பலரின் பெயர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக யூகங்கள் வெளியாகி உள்ளது.

இவங்க யாரும் இல்லை

இவங்க யாரும் இல்லை

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர் டிடி,தர்ஷா குப்தா, பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, ரோஷினி, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு புதுபட்டியல் உருவாகி உள்ளது. இருந்தாலும், யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் ஞாயிற்றுக்கிழமைதான் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X