பொம்பளைய பளார்னு அடிக்கணும்னு சொல்லக் கூடாது.. கறாராக கண்டித்த கமல்.. குவியுது பாராட்டு!
சென்னை: தனலட்சுமி என்ன தான் விளையாட்டில் தகிடு தத்தம் செய்தாலும், அதற்காக அவரை பளாரென அடிக்கணும்னு சொல்லக் கூடாது என அந்த காகிதத்தையே தூக்கிப் போட சொன்ன கமல்ஹாசனின் பேச்சை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் நடந்து கொள்வதை போல எல்லாம் போட்டியாளர்களுடன் சட்டையை கழட்டி விட்டு சண்டைக்கு செல்லுங்கள் என சில நெட்டிசன்கள் சொன்னாலும், கமல் தனக்கான வெயிட்டேஜை கொஞ்சம் கூட இதுவரை குறைத்துக் கொண்டதே இல்லை.
தனலட்சுமி விஷயத்தில் கமல்ஹாசன் விளையாட்டுக்கு கூட அதை அனுமதிக்காதது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடிதடி கிடையாது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு தான் கோபம் வந்தாலும், அடிதடி நடந்ததே இல்லை. அதற்கு கமலும் 6 சீசன்களாகியும் அனுமதி கொடுத்ததே இல்லை. எல்லை மீறிய பேச்சுக்கள், தள்ளி விடுவது போன்ற விஷயங்கள் சண்டை உச்சகட்டமாக இருந்தாலும், கத்தியே சண்டையை போடுவார்கள், பின்னர் வெள்ளிக்கிழமை ஆனதும், ஸாரி கேட்டு சமாதானம் ஆகி விடுவார்கள்.

தனலட்சுமிக்கு பளார்
பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வதை போல வெளியே தனலட்சுமி நடந்திருந்தா நடக்கிறதே வேற, சும்மா பளாருன்னு விழுந்து இருக்கும் என்கிற லெட்டரை அசீம் கொஞ்சம் கூட தயக்கமின்றி மற்ற லெட்டர்களை படிப்பதை விட படு ஜாலியாகவே படித்தார். ஆனால், உடனடியாக கமல் அதனை அங்கேயே கண்டித்து நிறுத்தி விட்டார்.

கமல் கறார்
பொம்பளை புள்ளைய விளையாட்டுக்கு கூட பளார்னு அடிக்கணும்னு சொல்லக் கூடாது. இந்த லெட்டரை தூக்கி வீசிட்டு அடுத்த லெட்டரை படிங்க அசீம் என கமல் கண்டித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை முடிந்த வரை கண்ணியம் குறையாமல் கமல் நடத்தி வருகிறார் என பலரும் அந்த கேள்வியை கடந்து போக சொன்னதை கேட்டதும் பாராட்டி வருகின்றனர்.

சொன்னது ஏடிகே
தனலட்சுமிக்கு எதிராக இப்படியொரு கருத்தை சொன்னது அசீம் தான் என தனலட்சுமி கூட தப்பா நினைப்பாங்க.. ஆனால், சொன்னது ஏடிகே.. நல்லவேளை கமல் புண்ணியத்தால தப்பிச்சோம்னு ஏடிகே நினைப்பாரு என நெட்டிசன்கள் ஏடிகேவை பந்தாடி வருகின்றனர்.

கண்ணீருடன் நன்றி
பிக் பாஸ் ஆடியன்ஸ் கைதட்டலை வைத்தே தனக்கு வெளியே கெட்டப் பெயர் உருவாகி விட்டது என உணர்ந்து கொண்ட தனலட்சுமி, இப்படி தன்னை அறைய வேண்டும் என யாரோ நினைத்துள்ளார்களே என நினைத்து மனதளவில் தவித்துக் கொண்டிருக்க கமல் இப்படி பேசியதும், கண்ணீருடன் நன்றி தெரிவித்த காட்சிகள் சனிக்கிழமை எபிசோடின் ஹைலைட்டாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











