காரித் துப்ப சொல்றீங்களா.. உங்க தரம் என்னன்னு தெரிஞ்சிடுச்சு அசீம்.. அசிங்கப்படுத்திய கமல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வெற்றிகரமாக 41வது நாளை கடந்துள்ளது. சனிக்கிழமை எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில் அசீமை வெளுத்து வாங்கி உள்ளார் கமல்ஹாசன்.

அசீம் என்ன தான் எல்லை மீறி தவறுகள் செய்தாலும், வெள்ளிக்கிழமை நாயகனாக மாறி தேம்பி சில நிமிடங்கள் அழுதுவிட்டு, விக்ரமனிடம் ஸாரி சொல்லிவிட்டால் போதும் சனிக்கிழமை கண்டிப்புடன் முதல் ஆளாக சேவ் ஆகி விடுவார்.

அதனால் தான் தொடர்ந்து அட்வான்ஸ் புக்கிங்கில் அசீம் தவறுகளை அடுக்கடுக்காக செய்து வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.

எச்சில் மேட்டர்

எச்சில் மேட்டர்

அதிக உப்பை போட்டு ஷிவின் ஆரம்பித்த விஷயம் அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே எச்சில் சண்டையாக வெடித்தது. இந்த வாரம் கமல் எப்படியும் அதற்காக அசீமுக்கு வாத்தி ரெய்டு நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகள் அடங்கிய ப்ரோமோ தற்போது வெளியாகி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

காரித் துப்பி

காரித் துப்பி

எச்சில் சாப்பாட்டை ராஜா சாப்பிடுவதா என்பதில் ஆரம்பித்து, காரித் துப்பிக் கொடுத்தா சாப்பிடுவீங்களான்னு கேட்டு பெரிய பிரச்சனையே இந்த வாரம் நடந்து விட்டது என கமல் ஆரம்பிக்க, விக்ரமன் எழுந்து நின்று ஆமாம் சார், அசீம் அப்படி எச்சில் துப்பிக் கொடுப்பேன் சாப்பிடுறீங்களான்னு கேட்டது தப்பான ஒரு பேச்சு என கமலிடம் போட்டுக் கொடுக்க கமல் அசீமை கண்டிக்க ஆரம்பித்துள்ளார்.

உங்க தரம் தெரியுது

உங்க தரம் தெரியுது

உங்களுடைய குணம் உங்களுடைய தரம் என்பதை காட்டி விடும் என கமல் சார் அசீமின் தரம் ரொம்பவே மோசமானது என்பதை சுட்டிக் காட்டி வெளுத்து வாங்கி உள்ளார். இவ்வளவு வசவுகளையும் கேட்டுக் கொண்டு அசீம் அடங்கி விடுவது போல சில நாட்கள் நடிப்பார். மீண்டும் அவர் தனது அராஜகத்தை ஆரம்பித்துவிடுவார் ஆண்டவரே அவரை உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அசீம் அமைதி

அசீம் அமைதி

கமல் அசீமை திட்ட திட்ட.. நானா அப்படி செய்தேன் என்பது போல அப்பாவி போல பார்க்கும் அசீமை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். கமல் முன்பாக மட்டும் கடுப்பாகிடாதீங்க என பிஆர் டீம் பக்காவாக சொல்லி அனுப்பி இருக்காங்க போல எப்படியும் இவர் தான் முதலில் சேவ் ஆகப் போகிறார் என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X