சிறுநீர் கேட்ட ரச்சிதா.. விழுந்து விழுந்து சிரித்த கமல்.. ராபர்ட் மாஸ்டரோட மானமே போச்சு!
சென்னை: தமிழை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கொன்று புதைத்து விட்டனர் என ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக திட்டித் தீர்த்து வந்த நிலையில், அந்த போர்ஷனையே காமெடியாக மாற்றி சிரிக்க செய்து விட்டார் கமல்ஹாசன்.
இந்த வாரம் ராயல் மியூசியமாக பிக் பாஸ் வீடு மாறியதில் இருந்தே ஏகப்பட்ட க்ரிஞ்சான விஷயங்கள் தான் நடந்து வந்தது.
அதிலும், செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக சிறிது தண்ணீர் வேண்டும் என கேட்படதற்கு பதிலாக ரச்சிதா சிறுநீர் வேண்டுமென கேட்டது சனிக்கிழமை எபிசோடில் கொண்டு வரப்பட்டு கமல் தனது ஸ்டைலில் விசாரித்தார்.

சிறுநீர் கேட்ட ரச்சிதா
ராபர்ட் மாஸ்டரிடம் சிறுநீர் வேண்டும் என ரச்சிதா கேட்க, ராபர்ட் மாஸ்டர் அதை திருத்தாமல் ராணி கேட்டுட்டாங்களேன்னு .. இதோ கொண்டு வரேன் என சென்றது தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது. பல ரசிகர்கள் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஏன் இப்படி இருக்காங்க கமல் சார் இதை தட்டிக் கேட்க வேண்டும் என கொந்தளித்தனர்.

புரண்டு புரண்டு சிரித்தேன்
அந்த விஷயத்தை எடுத்து பேசிய கமல் தான் புரண்டு புரண்டு சிரித்தேன் என்றும் எழுதினால் கூட இப்படியொரு ஜோக் வராது என்றும் இந்த ராயல் மியூசியம் டாஸ்க்கில் அத்தி பூத்தது போல வந்து விழுந்த ஜோக் இது என சொல்லி அந்த பிரச்சனையை சிரித்தே அழகாக சமாளித்து விட்டார்.

அசிங்கப்பட்ட ரச்சிதா
நிவாஷினியின் தமிழ் பற்றி எழுந்த பேச்சு அப்படியே ரச்சிதா பக்கம் திரும்பியதுமே அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு மூக்குத்தி ரச்சிதா அசிங்கப்பட்டு முகத்தையே மூடிக் கொண்டார். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அவரை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். ஆடியன்ஸும் அதற்கும் மேல் கைதட்டி சிரித்து விட்டனர்.

மானமே போச்சு
ரச்சிதாவுக்குத் தான் தமிழில் பிரச்சனை இருக்கு ராபர்ட் மாஸ்டருக்குமா பிரச்சனை என கமல் கேட்க அவருடைய மானமே போச்சு. போதா குறைக்கு ஷிவின் வேறூ ராஜாவாக சரியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டும் போது கூட அவர் மக்களின் ராஜாவாக இல்லை ரச்சிதாவின் ராஜாவாகவே இருந்தார் என சிக்ஸர் அடித்து விட்டார் ஷிவின்.


Click it and Unblock the Notifications











