Bigg Boss Tamil 6: ஷெரினாவை அந்த விஷயத்துக்காக ‘ஸாரி’ கேட்க வைத்த கமல்.. பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை: ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலாரை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து வெளியேற போவது நம்ம ஷெரினா தான்.

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடிலேயே ஷெரினாவுக்கு ஒரு விஷயத்தில் கமல் நறுக்கென குட்டு வைத்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

உடனடியாக தனது தவறை நினைத்து வருந்திய ஷெரினா 'ஸாரி'யும் கேட்டு விட்டார்.

கமல் பாராட்டு

கமல் பாராட்டு

மைனா மற்றும் மணிகண்டன் குக்கூ படத்தின் கான்செப்ட்டை எடுத்து பண்ண ஸ்கிட் ரொம்பவே பிடித்து இருக்கிறது என்றும், அதைவிட விக்ரமன், ரச்சிதா மற்றும் அமுதவாணன் மூவரும் இணைந்து போட்ட அந்த மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை மாற வேண்டும் என்கிற டிராமா சூப்பர் என வெகுவாக பாராட்டி விக்ரமனை இந்த வாரம் முதல் நபராக சேவ் செய்து விட்டார்.

மைனாவும் மணிகண்டனும்

மைனாவும் மணிகண்டனும்

மைனாவும் மணிகண்டனும் போட்ட அந்த visually challenged டிராமா சிறப்பாக இருந்தததை பாராட்டிய ஷெரினா மைனாவுக்கு பதிலாக மணிகண்டனுக்கு பச்சை நிற டிஆர்பியை பரிசாக அளித்தார். ஆனால், அவர் அப்போது Blind ஆக நடிச்சி அசத்துனாங்க என்கிற வார்த்தையை பயன்படுத்தியதுமே கமல் குறுக்கிட்டார்.

பிளைண்ட்னு சொல்லாதீங்க

பிளைண்ட்னு சொல்லாதீங்க

எல்லாம் சரி ஷெரினா ஆனால், அவர்களை பிளைண்ட்னு சொல்லாதீங்க விஷுவலி சேலஞ்ச்ட் நபர்கள் என சொல்லுங்கள் என கமல்ஹாசன் சொன்னதை கேட்டதுமே தனது பெரிய தவறை உணர்ந்து கொண்டார் ஷெரினா. உடனடியாக அதற்கு மன்னிப்பும் கேட்டார்.

ஸாரி கேட்ட ஷெரினா

ஸாரி கேட்ட ஷெரினா

ஸாரி நான் அப்படி சொன்னதுக்கு என்ன மன்னிச்சிடுங்க என கமல்ஹாசனிடம் மக்களிடமும் ஷெரினா மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அடுத்த பலியாடு நீதான்மா அது தெரியாமல் இப்படி பேசிட்டு இருக்க என பிக் பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பை பை ஷெரினா என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

ஆயிஷா ஹேப்பி ஆகிடுவாங்க

ஆயிஷா ஹேப்பி ஆகிடுவாங்க

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பேண்டேஜ் பேபி ஷெரினா தான் வெளியேறி உள்ளார் என்கிற தகவல்கள் லீக் ஆகி உள்ள நிலையில், நாளை ஆயிஷா அடையப் போகும் மனநிம்மதியை காணத்தான் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் பண்ணி வருகின்றனர். சனிக்கிழமை எபிசோடு முழுக்கவே அழுத மூஞ்சியாகவே இருந்த ஆயிஷா ஷெரினா அவுட் என்பதை தெரிந்ததும் அடுத்த வாரம் அசீம் ஆவியை தனது கூடுக்குள் ஏற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X