Bigg Boss Tamil 6: அசீம் நிஜமாவே ஒரு ’சள்ளை’ தான்.. என்ன கமல்ஹாசனே இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: இந்த வாரம் தனலட்சுமிக்கு ஒண்ணுமே தெரியாது போய் கம்முனு படு என அசீம் பேசியதும், அசீமை சள்ளை என தனா திட்டியதை நோட் பண்ணி நொங்கெடுத்து விட்டார் கமல்ஹாசன்.

தனலட்சுமியின் ஆவி அசீம் உடம்பிலும், அசீமின் ஆவி தனலட்சுமி உடம்பிலும் கூடு விட்டு கூடு பாய்ந்து விட்டதா? என கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், இந்த வாரம் அசீம் அமைதியாக இருந்ததை வெகுவாக பாராட்டினார்.

அதே நேரத்தில் தனலட்சுமி சொன்ன 'சள்ளை' தான் அசீம் என கமல் கொடுத்த விளக்கம் வேறலெவலில் இருந்தது.

அசீம் டிரான்ஸ்ஃபர்மேஷன்

அசீம் டிரான்ஸ்ஃபர்மேஷன்

கடந்த வாரத்தில் எல்லாம் ரசிகர்கள் அசீமுக்கு கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டும், தனலட்சுமியுடன் அவர் எப்படி அப்படி சண்டை போடலாம் என சொன்ன ரசிகர்களே இந்த வாரம் தனலட்சுமி மீது தான் தப்பு, அசீம் ரொம்ப அமைதியாகி விட்டார் என பேசும் அளவுக்கு அசீமின் டிரான்ஸ்ஃபர்மேஷன் உள்ளது.

அசீமை பாராட்டிய கமல்

அசீமை பாராட்டிய கமல்

தட்டிக் கேட்கிறதும், தட்டிக் கொடுக்கிறதுமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அசீம் உங்களுக்கு நான் அட்வைஸ் எல்லாம் சொல்லவில்லை, கண்டிக்கிறேன் என கொதித்தெழுந்த கமல், இந்த வாரம் அசீமின் மனமாற்றத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு பாராட்டினார்.

கூடுவிட்டு கூடு மாறிடுச்சா

கூடுவிட்டு கூடு மாறிடுச்சா

தனலட்சுமியின் ஆவி அசீம் உடம்பிலும், அசீமின் ஆவி தனலட்சுமி உடம்பிலும் இந்த வாரம் போய் விட்டது போல எனக்கு தோன்றியது என கமல் இருவரையுமே வஞ்சப்புகழ்ச்சி அணியில் வச்சு செய்து விட்டார். மேலும், தனலட்சுமியின் கோபத்தை கட்டுப்படுத்தவும் தனலட்சுமி பேசுவது போலவே பேசி தாளித்துக் கொட்டினார்.

அசீம் சள்ளை தான்

அசீம் சள்ளை தான்

அசீமுக்கும் தனாவுக்கும் இடையேயான சண்டையில் சள்ளைன்னு அசீமை தனா திட்டி இருந்தார். சள்ளைன்னா என்னன்னு தெரியுமா? என கமல் தனாவை கேட்டதும், திரும்ப திரும்ப தொல்லை கொடுக்கிறது சார்ன்னு சொல்லியிருந்தாங்க.. ஆமாம், அசீம் ஒரு சள்ளை தான் என கமல்ஹாசனும் அதிரடியாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சள்ளை மீன்

சள்ளை மீன்

தூண்டில் முள்ளில் உள்ள புழுவையே சாப்பிட்டு, தூண்டிலில் சிக்காமல் செல்லும் சிறிய வகை மீனுக்கு சள்ளை என்று பெயர் உள்ளது. சள்ளை மீன் வந்து விட்டால், அன்னைக்கு மீனவர்களுக்கு மீன் சிக்காது. அதைத்தான் வட்டார வழக்காக சொல்ல ஆரம்பித்தனர். பல பேர் அசீமை இந்த வாரம் வெளியே அனுப்பிட வேண்டும் என்கிற திட்டத்தில் போட்ட தூண்டிலில் எல்லாம் அவர் சிக்காமல் சள்ளையாக தப்பித்துக் கொண்டார் என சூப்பர் விளக்கம் கொடுத்து பாராட்டினார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X