Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.. அசீமுக்கு அறிவே இல்லை என விளாசிய கமல்.. தரமான சம்பவம்!
சென்னை: இந்த வாரம் அசீம் அட்டகத்தியா? விக்ரமன் அட்டகத்தியா என சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சண்டையே வெடித்தது.
அசீம் அமுதவாணனை அடித்தாரா? இல்லையா? என்பதற்கு குறும்படம் எல்லாம் போட்டுக் காட்டாமல் தேவையில்லாமல் அசீம் தலையிட்டு மோசமாக பேசியதே தவறு தான் என கமல் வெளுத்து வாங்கி விட்டார்.
நானும் கோபத்துடன் ரெட் கார்டு தூக்கி அடித்தால், எனக்கும் அசீமுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என ஆங்கருக்கே ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அசீமுக்கு இன்னும் ரெட் கார்டு கொடுக்க ஆர்டர் கொடுக்கலைங்க என கமல் சேஃப் கேம் ஆடிவிட்டார்.
அட்டக்
கத்தி
அசீம்,
காமெடி
பீஸ்
மைனா
நந்தினி…
Simply
Wasted
என
பங்கமாக
கலாய்த்த
பிக்
பாஸ்!

அசீம் அமுது சண்டை
இந்த வாரம் ஏலியன் vs ஆதிவாசி டாஸ்க்கின் போது அமுதவாணன் மற்றும் கதிரவன் இடையே போட்டி எல்லை மீறி சென்றது. அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்த அசீம் அமுதவாணன் உடன் பெரும் சண்டையை போட்டார். அமுதவாணனின் கழுத்தில் கை வைத்து அசீம் திருப்பியதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமுதவாணன் அசீம் அடித்தே விட்டார் என பெரிய சீனையே கிளப்பி விட்டார்.

அசிங்கப்படுத்திய கமல்
சனிக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ப்ரோமோ கார்டு கொடுக்க வேண்டும் என்கிற டாஸ்க்கை கமல் வைத்தார். ஆனால், அசீமுக்கு மட்டும் யாரும் கொடுக்க வேண்டாம் என கமல் சொன்னதுமே ஹாப்பியான அசீமை அடுத்த நொடியே அசிங்கப்படுத்தி விட்டார். அசீம் இல்லாத காரணத்தினால், அதிகமானோர் தனலட்சுமிக்கு அந்த டேகை கொடுத்தனர்.

திட்டிய கமல்
இதுவரை பிக் பாஸ் போட்டியாளர்களை கண்டிக்கிறேன் என சொல்லி வந்த கமல் இந்த சீசனில் அசீமை திட்டுகிறேன் என்றே டைரக்ட்டாக தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சொல்லி வருகிறார். ஆனால், கமல் எபிசோடில் மட்டும் பம்மிய படி இருக்கும் அசீம் மற்ற நேரங்களில் தனது சேட்டையை கட்டவிழ்த்து விடுகிறார்.

ரெட் கார்டு கொடுத்தால்
அசீம் செய்தது தவறு என்றும் அவருக்கு ரெட் கார்டு கொடுங்க என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நானும் உடனடியாக கோபப்பட்டு ரெட் கார்டை தூக்கி அடித்தேன் என்றால், அசீமுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நான் ஒரு ஆங்கர், கப்பலை எப்படி ஆங்கர் காப்பாற்றுகிறதோ இந்த ஷோவை காப்பாற்றுவது தான் என் வேலை. ஹோஸ்ட் என்று சொன்னால், இங்குள்ள போட்டியாளர்களை கவனித்துக் கொள்வது என் பொறுப்பு என குட்டி ஸ்டோரியே சொல்லி ரெட் கார்டு கொடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்.

புத்தி மட்டு
ஆனால், அதற்கு சற்றும் குறையாத வகையில், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை அதிரடியாக சொன்ன கமல், அசீமுக்கு அறிவே கிடையாது என சொல்ல வரவில்லை. ஆத்திரம் வந்தால் திறமைசாலிக்கு கூட அறிவு வேலை செய்யாது என்பதை சவுக்கடி கொடுப்பது போல சொல்லி தரமான சம்பவத்தை செய்து விட்டார் கமல்.

திருந்துவாரா அசீம்
ஆனால், கமல் என்னதான் சொன்னாலும், தம்ப்ஸ் அப் காட்டி வருந்தாமல், வெறுப்பேற்றுவது போலவே அசீம் நடந்து கொண்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அசீம் கொஞ்சமும் திருந்த மாட்டார் என்றே தெரிகிறது என விளாசி வருகின்றனர். அடுத்த வாரம் நாமினேஷனில் அசீம் வந்தால் யாரும் ஓட்டு போடாமல் வெளியே அனுப்ப வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.