நீ யாருன்னு கேட்டா.. தைரியமா இப்படி சொல்லுங்க தனலட்சுமி.. அசல் கோலார் விஷயத்தில் கமல் சரவெடி!
சென்னை: தனலட்சுமிக்கும் அசல் கோலாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்த பஞ்சாயத்து எந்த புரமோவிலும் வராத நிலையில், அதை அப்படியே விட்டு விட்டார்களா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், நிகழ்ச்சியில் கமல் அதை மறக்காமல் பேசி இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்து விட்டார்.
நீயாரு நீயாருன்னு கேட்டா ஒதுங்கி போகாதீங்க.. இப்படி சொல்லுங்க என தனலட்சுமிக்கு கமல் ஆதரவாக பேசியதும் ஒரு செகண்ட் அழுது நன்றி கூறினார் தனலட்சுமி.

அசல் கோலார் பஞ்சாயத்து
அண்ணான்னு கூப்பிட்டேன், அதுக்கு அவர் என்ன ஆன்ட, பெரியம்மான்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்துனாரு அதுதான் பிரச்சனை வர காரணமே என கமல் அசல் கோலார் - தனலட்சுமி பஞ்சாயத்தை கையில் எடுத்ததுமே தனலட்சுமி தடாலடியாக எல்லாத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார். அப்படியே எதுவுமெ பண்ணாதவர் போல அசல் கோலார் முகத்தை வைத்துக் கொண்டு கொடுத்த ரியாக்ஷன் தான் இரிடேட் செய்வதாக ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அண்ணான்னு சொன்னா
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களையும் நொண்டிக் கொண்டிருக்கும் அசல் கோலாரை பார்த்து உஷாராக அண்ணான்னு சொன்னா எப்படிம்மா பிடிக்கும் என தனலட்சுமியையும் பார்த்து ரசிகர்கள் கிண்டலாக கேள்வி கேட்டு வருகின்றனர். அவ என்ன அண்ணான்னு சொன்னா அது எனக்கு பிடிக்கலைன்னு கமலிடமே அசல் கோலார் பேச, அவர் அடக்கி வாசிக்க வைத்து விட்டார்.

நீங்கவொரு ராப் கலைஞர்
ராப் இசைக் கலைஞரான நீங்கள் அதனை அந்த அரசியலை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பொறுப்புடன் நடக்க வேண்டும், சும்மா இஷ்டத்துக்கு ஜொள்ளு விட்டுக் கொண்டு பெண் போட்டியாளர்களுடன் சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது என மறைமுகமாக மண்டைக்கு ஏறும் அளவுக்கு புரிய வைத்து விட்டார் கமல்.

நீ யாருன்னு கேட்டா
நீ யாரு.. நீ யாருன்னு உன்னை பார்த்து நசுக்குவது போல கேட்டால், நானும் உன்னை மாதிரி ஒரு பிக் பாஸ் போட்டியாளர் தான் டா கம்முனு போடா என வெளுத்து விடுங்கள் என்றே தனலட்சுமிக்கு தைரியம் கொடுத்து விட்டார் கமல். சும்மாவே தனலட்சுமி இஷ்டத்துக்கு எகிறுவார், இப்போ கமல் வேற கொம்பு சீவி விட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் இன்னும் கச்சேரி களைகட்டும் என தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

லேசான டிச்
அசீம் விஷயத்தை கமல் எப்படி ஹேண்டில் பண்ணினாரோ அதை விட லேசான டிச் கொடுத்தே அசல் விஷயத்தை கமல் கையாண்டுள்ளார் என்றும் விமர்சனங்கள் வெடித்து வருகின்றன. அடுத்த வார நாமினேஷனில் அதிகமாக அசல் கோலார், அசீம் பெயர்கள் வருவது கன்ஃபார்ம் என்பது தெளிவாகி விட்டது. ராபர்ட் மாஸ்டர் வந்தால்,அவருக்கு குட் பை சொல்லி அனுப்பி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











