ஷிவினுக்கு சிகப்பு கொடி கொடுத்த போட்டியாளர்கள்.. பச்சை கொடி கொடுக்கும் மக்கள்.. ஆட்டம் ஆரம்பம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து முதல் வாரத்தில் இப்படி கமல் பேசும் நிகழ்ச்சியில் கூட பங்கேற்க முடியாமல் வெளியேறிவிட்டார்.

ஆனால், இந்த சீசனில் மக்கள் போட்டியாளராக அடியெடுத்து வைத்துள்ள ஷிவின் கணேசன் முதல் வாரத்தை முடித்த நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களால் தான் ஒதுக்கப்படுவதாக உணரும் வகையில் சனிக்கிழமை எபிசோடு சென்றது.

கிச்சன் டீம் லீடரான ஷிவினுக்கு பச்சைக் கொடி கொடுத்து விட்டு உப்புமா சாந்தி சிகப்பு கொடியை மாற்றி கொடுத்ததும், அடுத்தடுத்த போட்டியாளர்களும் ஷிவினுக்கு சிகப்பு கொடியையே கொடுத்து விட்டனர்.

உசுப்பேற்றி விட்ட கமல்

உசுப்பேற்றி விட்ட கமல்

4 நாட்களிலேயே 40 நாட்கள் ஆன அளவுக்கு இந்த சீசன் ஆரம்பமே சரவெடியாக ஆரம்பித்துள்ளது என வந்ததுமே உசுப்பேற்றி விட்டார் கமல். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி சொதப்பலாக சென்றால் நல்லா இருக்காது என்பதற்காக பிக் பாஸ் செய்யும் நாரதர் வேலையையும் சேர்த்து இவரே செய்து விட்டார். சிகப்பு, பச்சைக் கொடிகளை டீம் லீடர்களுக்கு கொடுக்க வேண்டும் என ஆரம்பித்து இனிதே பிக் பாஸ் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

கதிரவனுக்கு க்ரீன்

கதிரவனுக்கு க்ரீன்

க்ளீனிங் டீமில் இருந்த கதிரவனுக்கு அவருடைய டீமில் இருந்த அசீம், அசல் கோளார் என ஒவ்வொருத்தராக வரிசையாக பாராட்டி பச்சைக் கொடி கொடுத்து பூரிப்படைய செய்து விட்டனர். என்னடா ஒரு சிகப்பு கொடி கூட இல்லையே, விஜே கதிரவன் கிராண்ட் ஃபினாலே வரைக்கும் கன்ஃபார்மாக வந்து விடுவார் போல என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர்.

ஷிவினுக்கு சிகப்பு

ஷிவினுக்கு சிகப்பு

அடுத்து மற்ற டீமை கூப்பிட்டால் மறுபடியும் பச்சைக் கொடியாக கொடுத்து போர் அடிக்க வைத்து விடுவார்கள், கொஞ்சம் கிச்சன் டீமை கூப்பிட்டு பற்ற வைப்போம் என நினைத்து கமல் அழைக்க கிச்சன் டீம் கேப்டனான திருநங்கை போட்டியாளர் ஷிவின் கணேசனுக்கு எல்லோருமே சிகப்பு கொடியை கொடுத்து நீங்க வொர்ஸ்ட் டீம் லீடர் என க்ரூபிஸத்தை பச்சையாக காட்டி விட்டனர் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

உப்புமா சாந்தி

உப்புமா சாந்தி

இனிக்க இனிக்க பேசி கவுக்கும் கேரக்டர் தான் நான் என்பதை உப்புமா சாந்தி ஷிவினுக்கு முதலில் பச்சைக் கொடியை கொடுத்து விட்டு பின்னர் சிகப்பு கொடியை கொடுத்ததுமே புரிந்து விட்டது என பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ரொம்ப திமிர்

ரொம்ப திமிர்

சாம்பார் சண்டை முதல் சமையல் டீமில் ஏற்பட்ட எந்தவொரு சண்டையையும் சமாதானம் செய்து வைக்காமல், மற்றவர்களின் கருத்தைக் கூட கேட்காமல் ஷிவின் ரொம்பவே திமிர் பிடித்தவரை போல நடந்து கொண்டதால் தான் அவருக்கு அனைவரும் சிவப்பு கொடியை கொடுத்தனர் என ஷிவின் எதிர்பாரளர்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மக்கள் சப்போர்ட்

மக்கள் சப்போர்ட்

முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் ஓட வேண்டும் என்கிற எந்தவொரு அவசரமும் இல்லை. ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் தி ரேஸ் என கமெண்ட் போட்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் சிவப்பு கொடி கொடுத்தாலும், ஷிவிஉக்கு மக்களாகிய நாங்கள் பச்சைக் கொடி கொடுக்கிறோம் என #Shivin ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X