Bigg Boss Tamil 6: அடங்காத அசீம்.. நீங்க என்ன ஜட்ஜுக்கு படிச்சிட்டு வந்தீங்களா.. மகேஸ்வரி விளாசல்!

சென்னை: ஜட்ஜ்னா எப்படி இருக்கணும் என மகேஸ்வரிக்கு அசீம் கிளாஸ் எடுக்க ஆரம்பித்த உடனே நீங்க என்ன ஜட்ஜுக்கா படிச்சிட்டு வந்தீங்க என அசீமை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் மகேஸ்வரி.

கடந்த வாரம் அசீம் உடன் சேர்ந்து கொண்டு விக்ரமன், தனலட்சுமி உடன் சண்டை போட்ட மகேஸ்வரியா இது என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த வாரம் நாமினேஷனில் வராத நிலையில், எப்படியாவது அசீமை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்கிற முடிவுக்கே மகேஸ்வரி வந்து விட்டார் என்றும் அசீம் அமைதியாக போற ஆள் எல்லாம் கிடையாது என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஆரம்பித்த அசீம்

ஆரம்பித்த அசீம்

இந்த வாரமாவது அடங்கி ஒடுங்கி இருப்பார் அசீம் என எதிர்பார்த்த நிலையில், தன்னை புரமோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு தடையாக மைனா பேசினார் என்றும் பேசியதே ரசிகர்களை பயங்கர அப்செட்டில் ஆழ்த்தியது. மேலும், தான் 97% ஜர்னலிஸத்தில் மார்க் வாங்கி உள்ளேன் என்றெல்லாம் அசீம் பேசியது, அவ்ளோ வாங்கியும் எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையே உனக்கு என வெளுத்து வருகின்றனர்.

ஜட்ஜ்மென்ட்

ஜட்ஜ்மென்ட்

பிக் பாஸ் வீட்டில் அந்த டிவி எனும் கான்செப்ட்டை ஆரம்பித்து மீண்டும் இந்த வாரத்திற்கான சண்டையை நாரதர் பிக் பாஸ் ஸ்டார்ட் பண்ணி விட்டார். சும்மா கீ கொடுத்தால் போதும் அசீம், பட்ட அசிங்கத்தை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் கத்த ஆரம்பித்து விடுவார் என தெரிந்தே அவர் தூண்டப்பட மகேஸ்வரியிடம் ஜட்ஜ்மென்ட் விவகாரத்தில் சண்டை பிடித்து விட்டார்.

ஜட்ஜுக்கு படிச்சீங்களா

ஜட்ஜுக்கு படிச்சீங்களா

அந்த டிவி டாஸ்க்கில் பேபி சமையல் மற்றும் டிவி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அசீம், தனலட்சுமி, ஷிவின் மற்றும் விக்ரமன் இதில் பங்கேற்று பேசினர். இந்நிலையில், எப்படியோ அசீமுக்கு குறைவான மதிப்பெண்களையே மகேஸ்வரி போட்டிருப்பார். உடனடியாக ஜட்ஜ் எப்படி இருக்கணும் என வகுப்பெடுக்க ஆரம்பித்த அசீமை நீங்க என்ன ஜட்ஜுக்கு படிச்சீங்களா என வெளுத்து வாங்கி உள்ளார்.

கத்துறது தவிர என்ன தெரியும்

கத்துறது தவிர என்ன தெரியும்

பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வைத்து அசீமுக்கு சரியான தண்டனை கொடுத்து வருகின்றனர். ஆனால், கடைசி வரைக்கும் அவர் திருந்த மாட்டார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், கத்துறத தவிர உனக்கு என்ன தெரியும் என எகிறி விட்டார் மகேஸ்வரி. தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவிற்காகவே இன்றைய எபிசோடை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X