பிக் பாஸ் சீசன் 6..ஆண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?..அட அவரும் இருக்காரா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கும் ஆண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மறுதினம் தொடங்க உள்ளது. கடந்த சில மாதங்களாக போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

நோ செல்பேன்...நோ சோஷியல் மீடியா... நோ டிவி என எந்தவிதமான வெளி தொடர்பும் இல்லாமல் நூறு நாட்கள் குடும்பத்தை மறந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும். வீட்டை சுற்றி பலர் இருந்தாலும், பல கேமிரா போட்டியாளர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்,உள்ளே எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள் என்பதுதான் கெத்தே.

அனைவருக்கும் பிடிக்கனும்

அனைவருக்கும் பிடிக்கனும்

போட்டி , பொறாமை, சண்டை, அழுகை என பலவற்றையும் சமாளித்து, உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கும் பிடிக்கனும், அப்போது தான் டைட்டிலை தட்டி தூக்க முடியும். கடந்த முறை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பொது மக்களின் மனதை கவர்ந்து வந்த ராஜூ டைட்டிலை தட்டி சென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடித்தார்.

அஸீம்

அஸீம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த முறையே இவரின் பெயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

ஆண் போட்டியாளர்கள்

ஆண் போட்டியாளர்கள்

அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் சீரியல் நடிகர் அஸிம், விஜய் டிவியில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளது விஜய் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X