Bigg Boss Tamil 6 Eviction: கடைசி நேரத்தில் தப்பித்த தனலட்சுமி.. இந்த வாரம் எவிக்ட் ஆனது யார்?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு மிக்சர் போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
திடீரென கருத்துக் கணிப்புகளில் தனலட்சுமி கடைசி இடத்தில் வந்தது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
ஆனால், கடைசியில் அவர் எவிக்ட் ஆகவில்லை என்கிற ஹாப்பி நியூஸ் ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே அசீம் மற்றும் தனலட்சுமியை வைத்துத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

அசீமுக்கு திட்டு மட்டும் தான்
எப்படி சண்டை போட்டாலும், தனக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதை அசீம் நல்லாவே அறிந்து கேமை விளையாடி வருகிறார். இந்த வாரம் எச்சில் சண்டை வரைக்கும் படு கேவலமாக சண்டை போட்டாலும், கடைசியில் கமல் ரெண்டு திட்டு திட்டிட்டு அட்வைஸ் பண்ணி ஃபர்ஸ்ட் சேவ்னு சொல்லப் போகிறார் என்கிற தெனாவட்டில் உட்கார்ந்து இருக்கிறார் அசீம்.

இளவரசி 2ம் இடம்
அதிக ஓட்டுக்களை பெற்று அசீம் இந்த வாரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அலட்டிக் கொள்ளாமல் அழகாக 2வது இடத்தை பிடித்திருக்கிறார் ஜனனி. இந்த வாரம் இளவரசியாக ஆட்டத்திலும் சற்றே கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அந்த அமுதவாணன் உடன் மட்டும் சேராமல் இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கருத்து.

தப்பித்த தனலட்சுமி
இந்த வாரம் நாமினேஷனில் ஏகப்பட்ட மிக்சர் போட்டியாளர்கள் இடம்பெற்ற நிலையில், டபுள் எவிக்ஷன் வைங்க 4 எவிக்ஷன் வச்சு அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுங்க என்றெல்லாம் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். திடீரென கடைசி இடத்திற்கு தனா வந்த நிலையில் சற்றே ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால், கடைசியில் தனலட்சுமி தப்பித்துள்ளார்.

யாரு எவிக்ட் ஆவாங்க?
கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினி தான் இந்த வாரம் ரொம்பவே மோசமான நிலையில் இருந்தனர். சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தையும் விளையாட்டில் காட்டாமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல நிவாஷினி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல்களை கசிய விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











