டூப்ளிகேட் அரசியல்வாதி விக்ரமன்.. முகத்திரையை கிழித்த குயின்ஸி.. நம்மாளுன்னு சொன்ன கமல்!

சென்னை: அரசியல்வாதி போட்டியாளரான விக்ரமன் தனது ஓட்டை கூட சரியாக போடத் தெரியாமல் தனலட்சுமியின் இன்ஃப்ளூயன்ஸ் வைத்து மாற்றிக் கொண்டது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியை எழுப்பி கமல் விக்ரமனை வெளுத்து வாங்கி விட்டார்.

கமல் சார் இந்த பிரச்சனையைத் தான் கேட்பார் என கரெக்ட்டா சொன்னீங்களே தனலட்சுமி அது என்ன பிரச்சனை என கிண்ட ஆரம்பித்ததுமே குயின்ஸி முகத்தில் அப்படியொரு குஷி.

ரச்சிதா நீங்க சொல்லுங்க என கமல் கேட்டதுமே, தனலட்சுமியை எப்போடா போட்டுக் கொடுப்போம் என காத்துக் கொண்டிருந்தது போல ரச்சிதா அனைத்தையும் அவிழ்த்து விட்டார்.

விக்ரமன் நியாயவான் அல்ல

விக்ரமன் நியாயவான் அல்ல

விக்ரமன் எல்லா இடத்திலும் வெளியே பார்க்கும் மக்களை யோசித்தே விளையாடி வருகிறார் என அசீம் ஆரம்பித்து வைத்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குயின்ஸிக்கு நடந்த ஓட்டு அரசியல் பக்கம் திரும்பி விக்ரமன் நியாயவான் இல்லை என்கிற முடிவுக்கே கொண்டு வந்து விட்டது. ஆரி போல இந்த சீசனில் விக்ரமன் ஆகிவிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது பயாஸ்ட் கேம் சற்றே கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனாவின் அரசியல்

தனாவின் அரசியல்

விக்ரமனை விட அரசியல்வாதியாக மாற அனைத்து அம்சங்களும் அப்படியே நிறைந்திருக்கும் ஒரு ஆள் என்றால் அது தனா தான். கடந்த வாரம் அப்படி அழுது புலம்பிய தனலட்சுமி, இந்த வாரம் நானா.. அப்படியா பேசினேன் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு கமல் சாரிடமே செய்த அரசியல் தில்லாலங்கடி எல்லாம் வேறலெவல்.

முகத்திரையை கிழித்த குயின்ஸி

முகத்திரையை கிழித்த குயின்ஸி

தனலட்சுமி கையை இறக்கினாலும், அதை தள்ளிவிட்டு நீங்க உங்க ஓட்டுப் போட ஏன் தயங்குனீங்க என குயின்ஸி தைரியமாக கேட்டதற்காக அவரை வெகுவாக பாராட்டினார் கமல். மேலும், குயின்ஸியின் இந்த செயல் தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இந்த வாரம் 2வது இடத்தில் சேவ் ஆகும் நிலைமையும் ஏற்படுத்தித் தந்தது. விக்ரமன் தான் செய்தது தவறு தான் என உணர்ந்து கொள்ளவும் உறுதுணையாக இருந்தது.

நம்மாளுன்னு சொன்ன கமல்

நம்மாளுன்னு சொன்ன கமல்

விக்ரமன் சரியாக நடந்திருக்க வேண்டும். ஒரு ஓட்டு மாறினாலும், அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என்பதை பாடமாக கற்றவன் நான் என அரசியலில் அடி வாங்கிய அனுபவங்களையும் எடுத்து சொன்ன கமல் நம்மாளு நீங்க.. நீங்களே இப்படி பண்ணா எப்படி? என பேசிய வார்த்தைகள் பிக் பாஸ் ரசிகர்களையே சற்று ஷாக் ஆக்கி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X