தவறான வார்த்தையால்.. தனலட்சுமியை திட்டிய ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் வெடித்தது சண்டை!

சென்னை: இந்த வாரம் அசீம் அமைதியாகி விட்ட நிலையில், அசல் கோலார் வெளியேறிய நிலையில், அப்படியே சைலன்ட் வீடாக பிக் பாஸ் மாறியிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ராபர்ட் மாஸ்டர் தனலட்சுமி சண்டை ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அடுத்த ஜித்தன் ரமேஷ் என கிண்டலடிக்கப்பட்டு வந்த ராபர்ட் மாஸ்டர் என்னோட சுய ரூபத்தை இந்த வாரம் பார்ப்பீங்க என கன்டென்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

தூங்கிக் கொண்டு இருந்த தனாவை எழுப்ப அவர் முயற்சிக்க செருப்பால அடிப்பேன் என்கிற அளவுக்கு இருவருக்கும் இடையே சண்டை முற்றி விட்டது.

ஆஃப் ஆன அசீம்

ஆஃப் ஆன அசீம்

சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல் செய்த சம்பவத்திற்கு பிறகு என்ன ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் அடங்கிப் போயுள்ளார் அசீம். இவர் புதன் கிழமை வரை இப்படித்தான் இருப்பார் என்றும் வியாழக்கிழமை ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு சனி, ஞாயிறு வாங்கிக் கட்டிக் கொள்வார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சில்மிஷங்கள் இல்லை

சில்மிஷங்கள் இல்லை

அசல் கோலார் கடந்த வாரம் வெளியேறிய நிலையில், தினம் ஒரு சில்மிஷம் என வீடியோக்கள் போட்டு ட்ரோல் பண்ண கன்டென்ட் கிடைக்காமல் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை ஓரக்கண்ணால ஓரங்கட்டும் காட்சிகளை எடுத்துப் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

சண்டை ஸ்டார்ட்

சண்டை ஸ்டார்ட்

சைலன்ட்டாக சைட் அடித்துக் கொண்டு இருந்த ராபர்ட் மாஸ்டரின் உள்ளே இருக்கும் பூனைக் குட்டியை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வர பார்க்கிறது பிக் பாஸ் வீடு. படுத்துக் கொண்டிருந்த தனலட்சுமியை எழுப்ப ராபர்ட் மாஸ்டர், நாய்.. நாய் குறைக்கும் என சொல்ல கடுப்பாகி விட்டார் தனலட்சுமி.

செருப்பால அடிப்பேன்

செருப்பால அடிப்பேன்

சும்மா சாப்பிடுறது, தூங்குறது மட்டுமே வேலையாக பார்க்கிறேனா? நான் என்ன பண்றேன் என்பதையே நோட்டம் போடுவதே இங்கே சிலருக்கு வேலையா போச்சு என தனலட்சுமி தடலாடியாக பேச, செருப்பால அடிப்பேன் என வாய்க்கு வந்த தவறான வார்த்தையை ராபர்ட் மாஸ்டர் பயன்படுத்தி விட்டார்.

கொந்தளித்த தனா

கொந்தளித்த தனா

என்ன மாஸ்டர் சொன்னீங்க என கோபத்தில் தனலட்சுமி கொந்தளிக்க இந்த வாரம் தனலட்சுமிக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் இடையே செம சண்டை இருக்கு என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். என் கூட நண்பர்களான ஏடிகேவை நான் ஜாலியாக நாய்ன்னு திட்டுறேன் என்றும் அதே போலத்தான் நினைத்து உன்னிடம் பேசினேன் இனிமேல் பேச மாட்டேன் என ராபர்ட் மாஸ்டர் தன் பக்கம் தனா துப்பாக்கியை திருப்பி விடக் கூடாது என ஒதுங்கி விட்டார். ஆனால், இது நிச்சயம் இந்த வாரம் பெருசா வெடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X