Bigg Boss Tamil 6: அடேங்கப்பா.. ஷெரினாவுக்கு வீட்டில் என்னவொரு உற்சாக வரவேற்பு.. டிரெண்டான வீடியோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து அவர்களது வீட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம் தான்.
பிக் பாஸ் வீட்டில் இருக்க ஒரு நாளைக்கு ஷெரினாவுக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக 28 நாட்கள் இருந்த ஷெரினாவுக்கு மொத்தமாக 7 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்ஸ்டாகிராம் லைவில் ஷெரினா கலந்து கொண்டு ரசிகர்கள் கேள்விக்கு எப்போது பதில் அளிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

உஷாரான விஜய் டிவி
பிக் பாஸ் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அவர்களை யூடியூப் சேனல்கள், மீடியாக்கள் என அனைத்துமே சுற்றி வளைத்துக் கொண்டு பேட்டி எடுத்துப் போட்டு செம காசு பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அதையும் நாமே செய்தால் என்ன என நினைத்த விஜய் டிவி போட்டியாளர்கள் பேட்டி கொடுக்க கூடாது என்றும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என தங்களது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கங்களில் வியூஸ் அள்ளி காசு பார்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.

ஷெரினா லைவ்
கடந்த வாரம் அசல் கோலார் வெளியான நிலையில், நான் அப்படிப்பட்ட பையனே கிடையாதுங்க என பகிரங்கமாக ரசிகர்கள் காலிலேயே விழுந்து விட்டார். அந்த லைவ் வீடியோ தீயாய் பரவிய நிலையில், நாளை மதியம் 12.10க்கு ஷெரினா லைவ் வீடியோவில் வந்து தனக்கு உண்மையாகவே தலையில் அடிபட்டது என்றும், பொய் சொல்லவில்லை என்றும் கூற உள்ளார்.

உற்சாக வரவேற்பு
வீட்டிற்கு வெளியே இரு புறங்களிலும் மின் விளக்குகள் போடப்பட்டு, பர்த்டே பார்ட்டி போல அலங்கரிக்கப்பட்ட வீட்டில் சொந்தங்கள், நண்பர்கள் வரவேற்க விஜய் டிவியில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட ஷெரினாவுக்கு வீட்டில் கிடைத்த உற்சாக வரவேற்பு வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஆனந்த கண்ணீர்
கேக் கட்டிங் செய்த பின்னர், அனைவருக்கும் கேக் ஊட்டிவிட்ட ஷெரினா சில நொடிகள் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பின்னர், கண்ணீரை துடைத்து விட்டு வெற்றி சிம்பிளை காட்டியுள்ள வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷெரினாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷெரினா சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் இருக்க ஒரு நாளைக்கு ஷெரினாவுக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக 28 நாட்கள் இருந்த ஷெரினாவுக்கு மொத்தமாக 7 ;லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் பாடல்
பிக் பாஸ் வீட்டில் மலையாளத்தில் பேசியதாகவே ஷெரினா வார்ன் செய்யப்பட்ட நிலையில், எவிக்ஷன் கார்டும் மலையாளத்திலேயே கொடுத்து கமல் அசிங்கப்படுத்தி வெளியேற்றியது பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியது. ஷெரினாவின் இந்த வரவேற்பு வீடியோவில் மலையாள பாடல் இடம்பெறாமல் தமிழ் பாடலான முதல் நீ முடிவும் நீ பாடல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











