ஷிவின் என்னம்மா வெட்கப்படுறாரு.. கமல் அப்படி சொன்னதும் தலையணையால் முகத்தை மறைத்து.. அய்யோ போங்க!

சென்னை: இந்த சீசனில் கிட்டத்தட்ட 40 நாட்கள் நெருங்கி விட்ட நிலையிலும், இன்னமும் டைடிட்ல் வின்னர் யார் என்றால், அது மில்லியன் டாலர் கேள்வியாகத்தான் இருக்கும்.

விக்ரமனுக்குத்தான் அதிகமான ரசிகர்கள் ஆதரவு என சிலர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் அதிக வாக்குகளுடன் அசீம் முதலில் சேவ் ஆனார்.

நாமினேஷனில் இல்லை என்றாலும், ஹவுஸ்மேட்களின் அன்பான க்ரீன் ஸ்டாம்ப்புகளையும் ரசிகர்களின் ஆதரவையும் அதிகமாகவே ஷிவின் பெற்று சூப்பராக விளையாடி வருகிறார்.

மிஸ் பண்ண நமீதா மாரிமுத்து

மிஸ் பண்ண நமீதா மாரிமுத்து

கடந்த சீசனில் இப்படியொரு வாய்ப்பு முதல் முறையாக நமீதா மாரிமுத்துவுக்கு கிடைத்தது. ஆனால், அவர் ஒரு வாரத்திலேயே விரதம் இருப்பதாக கூறி சாப்பிடாமல் மயக்கப்பட்டு விழுந்த நிலையில், வாக்கவுட் ஆனார். ஆனால், இந்த முறை ஷிவின் விளையாடி வருவதை பார்த்தால், கண்டிப்பாக இவரும் ஒரு ஃபைனலிஸ்ட் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கலக்கும் ஷிவின்

கலக்கும் ஷிவின்

பிக் பாஸ் வீட்டில் தனது மனதுக்கு பட்டதை பட்டென்று பேசி வருகிறார் ஷிவின். விக்ரமன், அசீம் என யாரையுமே அவர் வச்சி பார்ப்பதில்லை. தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், உடனடியாக ஒப்புக் கொண்டு கடந்து செல்கிறார். அது தொடர்பாக ரொம்பவும் ஃபீல் செய்வதில்லை. மகேஸ்வரி வெளியேற தான் காரணமோ என நினைத்து வருத்தப்பட்டாலும், உடனடியாக விக்ரமனிடம் என்னுடைய கேமை நான் விளையாடணுமே என ஷிவின் பேசியது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

ஒரே க்ரீன் தான்

ஒரே க்ரீன் தான்

ஷிவின் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என அவருக்கு ஏகப்பட்ட ஹவுஸ்மேட்கள் க்ரீன் ஸ்டாம்ப்பை குத்தி அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து விட்டனர். அசீமுக்கு அதிகப்படியான ரெட் ஸ்டாம்ப்புகள் வழக்கம் போல நிரம்பி வழிந்தன. தனாவுக்கும் ரெட் ஸ்டாம்ப்புகள் கிடைத்தன.

கமல் சொன்னதும் வெட்கம்

கமல் சொன்னதும் வெட்கம்

என்ன ஷிவின் நிறைய க்ரீன் உங்களுக்குத்தான் வந்திருக்கு என கமல் சொன்னதும் வெட்கப்பட்ட ஷிவின் தலையணை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்ள நீங்க கையில் வைத்திருக்கும் பில்லோவும் க்ரீன் தான் என கமல் ஒரே போடாக போட ஷிவின் பேச்சே வராமல் அனைவருக்கும் நன்றி சொல்லி உள்ளார்.

டைட்டில் கிடைக்குமா

டைட்டில் கிடைக்குமா

அசீம், விக்ரமன் இருவரை தாண்டி இதுவரை இந்த பிக் பாஸ் கேமை சிறப்பாக விளையாடி வரும் ரச்சிதா, சைலன்ட்டாக சேவ் ஆகி வரும் ஜனனி இன்னமும் சிலருக்கு டைட்டில் வின் பண்ண வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால், பலரும் ஷிவின் இந்த சீசன் டைட்டிலை வென்றால் நல்லா இருக்கும் என கருதி வருகின்றனர். வரும் வாரங்களில் ஷிவின் கேம் மேலும், மேம்படுமா? அல்லது என்ன ஆகும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X