Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Bigg Boss Tamil 6: இதுக்கு பேரு பிக் பாஸா? இல்லை விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டமா? கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இந்த வாரத்துடன் நிறைவு பெற உள்ளது. சீக்கிரம் முடிங்க பாஸ் என ரசிகர்களே சொல்லும் அளவுக்கு நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக தீவிர பிக் பாஸ் ரசிகர்களே வருத்தப்பட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர் கூட வரவில்லையே என கடுப்பான ரசிகர்களுக்கு இவ்வளவு பேர் போதுமா பாஸ் என்கிற அளவுக்கு கடைசி நேரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை தூக்கி நிறுத்த ஒட்டுமொத்த விஜய் டிவி ப்ராடக்ட்ஸையும் உள்ளே விட்டு ரசிகர்களை திணறடித்துள்ளனர்.
டிடி நீலகண்டன், ஜிபி முத்து, சரவணன், குக் வித் கோமாளி பிரபலங்கள், யூடியூபர்கள் என பலரையும் உள்ளே விட ரசிகர்கள் சந்தோஷம் அடைவதற்கு பதிலாக கடுப்பாகி உள்ளது தான் அதிர்ச்சியான விஷயமாக மாறி உள்ளது.
சவுண்டு சரோஜா பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி...வந்ததும் வராததுமா அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா!

டிஆர்பி டவுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாம் பிரபலங்கள் இல்லை நிறைய முகம் தெரியாத ஆட்களாக வந்துள்ளார்களே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அதே போல ஆரம்பத்தில் நிகழ்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. 4 நாட்களிலேயே 40 நாட்கள் ஆனது போல இருக்கு என கமல் சாரே பாராட்டினார். ஆனால், அதன் பின்னர் போட்டியாளர்கள் செட்டில் டவுனாக டிஆர்பியும் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது.

ஃபேக் டிராமா அதிகம்
ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே ஒரு விதமாக ஃபேக் டிராமாவாகத்தான் அரங்கேற்றப்படும். ஆனால், அது எந்தளவுக்கு ரசிக்கும் படியும் நம்பும் படியும் உள்ளதோ அந்த அளவுக்குத்தான் அந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்கும். ஆனால், அதற்கு பதிலாக பார்த்து பார்த்து புளித்துப் போன கதையை சினிமாக்களில் தொடர்ந்து எடுத்து வருவது போல பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் ஃபேக் டிராமா அதிகம் அரங்கேறியதால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டது.

டிடி நீலகண்டன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டிடி நீலகண்டன் போட்டியாளராக உள்ளே நுழைந்தால் நிகழ்ச்சி வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் பிரபலங்களை எல்லாம் வைத்துக் கொண்டு பிக் பாஸ் பொங்கல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவதை போல ஏகப்பட்ட விஜய் டிவி முகங்கள் உள்ளே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியா இல்லை இது வேற ஏதாவது விஜய் டிவி ஷோவா என்பது போல ரசிகர்களை குழப்பி உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சீரியல் ப்ரமோஷன்
கடந்த சீசன்களில் திரைப்படங்களின் ப்ரமோஷன் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று ரசிகர்களின் பொறுமையை சோதித்தன. பண்டிகை நாட்கள் வந்தால் விளம்பர டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வச்சு செய்து விடுவார்கள். இந்நிலையில், இந்த முறை புதிய சீரியல்களான சிறகடிக்க ஆசை, சொந்தமுள்ள வாழ்க்கை உள்ளிட்ட சீரியல்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பிரியங்கா மாகாபா ஆனந்த்
டிடி நீலகண்டன் மட்டுமின்றி பிரியங்கா, மாகாபா ஆனந்த் என அனைவருமே உள்ளே வந்து பொங்கல் பண்டிகையை பிக் பாஸ் பிரபலங்களுடன் கொண்டாடி அந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான பில்டப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சித்துள்ளனர்.

சுத்தமா பிடிக்கல
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வரும் தீவிர ரசிகர்களுக்கே இது முழுக்க முழுக்க விஜய் டிவி முகங்கள் கலந்து கொள்ளும் ஒரு ஷோவாகவே மாறிவிட்டதாக பல ரசிகர்களும் கமெண்ட் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். விக்ரமன் அல்லது அசீம் இருவரில் ஒருவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என்கிற சண்டையும் ஓடிக் கொண்டிருக்கின்றன.