Don't Miss!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6: மைனோவோட கம்மி.. இந்த வாரம் வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறியது அவர் தான் என நெருங்கிய வட்டாரங்கள் வீக்கெண்ட் ட்விஸ்ட்டை இப்பவே போட்டு உடைத்து விட்டன.
இந்த வாரம் அமுதவாணன் குறைவான ஓட்டுக்களுடன் இருந்த நிலையில், அவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கொடுத்து விஜய் டிவி காப்பாற்றி விட்டதாக பெரும் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளது.
ஏடிகே, கதிர், அசீம், மைனா நந்தினி எல்லாம் இன்னமும் உள்ளே இருக்கும் போது ரச்சிதா ஏன் வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.
Bigg
Boss
Tamil
6
Eviction:
இந்த
வாரம்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
கிளம்பும்
மணிகண்டன்..
அப்போ
மைனா?

அப்பாடா முடியப்போகுது
எப்போ தான் இந்த சீசன் முடியுமோ என்கிற மனநிலைக்கே பெருவாரியான பிக் பாஸ் ரசிகர்கள் வந்து விட்டனர். அந்த அளவுக்கு இந்த சீசன் வொர்ஸ்ட் சீசனாகவே மாறிவிட்டது. விஜய் டிவியே அதிரடியாக குக் வித் கோமாளி அடுத்த சீசனை கொண்டு வர உள்ளனர். இங்கே இருந்து எஸ்கேப் ஆன ஜிபி முத்து அதில் வந்து கலக்க உள்ளார்.

பலியாடு ரச்சிதா
இந்த வாரம் ரச்சிதா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து அந்த காரில் ஏறி புறப்பட்ட போட்டியாளர் என்கிற தகவல் வரை சமூக வலைதளங்களில் ஷூட்டிங் முடிந்த மறுகணமே லீக் ஆகி விட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அமுதவாணனுக்கு டிக்கெட் டு ஃபினாலே கொடுத்த நிலையிலேயே ரச்சிதா தான் இந்த வாரம் பலியாடு என தெரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிர்ச்சி
பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை பொறுமையை கடைபிடித்து விளையாடி வந்த ரச்சிதாவை இறுதி வாரம் வரையாவது வைத்திருக்கலாம். அவர் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவர் தான். ஆனால், அவரை இவ்வளவு விரைவாக அனுப்பியது தவறு என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏடிகே, மைனா இருவரில் ஒருவரை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சம்பளம் எவ்வளவு
பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்தே ரச்சிதா விளையாடி வருகிறார். ஒரு நாளைக்கு அவருக்கான சம்பளம் 28 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், சுமார் 26 லட்சம் ரூபாய் தொகையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி உள்ளதாக கூறுகின்றனர்.

மைனாவுக்கு அதிகம்
ரச்சிதா லீடு ரோலில் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் அவரது தோழியாக அறிமுகமான மைனா நந்தினி தனது முயற்சியால் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிலையில், ரச்சிதாவை விட அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறாராம். மைனா நந்தினி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கி வருவதாக கூறுகின்றனர்.