க்ரிஞ்ச் அசீமை விட கேவலமானது விஜய் டிவி.. விக்ரமன் தான் ரியல் வின்னர்.. நெட்டிசன்கள் காட்டம்!
சென்னை: #BoycottVijayTv என்ற ஹாஷ்டேக்கை விக்ரமன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அசீமுக்கு டைட்டில் கொடுத்தது கொஞ்சம் கூட முறையற்ற செயல் என்றும் விக்ரமன் தான் ரியல் வின்னர் என்றும் ட்வீட் போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் முந்தைய சீசன்களில் எல்லாம் ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் என போட்டியாளர்கள் வெல்வார்கள் என சில வாரங்களுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் தெரிந்து தயாராகி விட்டனர்.
ஆனால், இந்த சீசனில் கடைசி கிராண்ட் ஃபினாலே ஆரம்பிக்கும் வரை யார் டைட்டிலை வென்றார் என்பதே செம சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பிரச்சனையாக சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் டிரெண்டிங் வெடித்துள்ளது.

லவ் யூ வாத்தி
பிக் பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் வெளியே வந்த விக்ரமனுக்கு அவரது ஆர்மியினர் ரோஜாப்பூ மாலை அணிவித்து தலையில் மலர் மகுடம் சூடி லவ் யூ வாத்தி நீங்க தான் ரியல் வின்னர் என கொண்டாடி வருகின்றனர். மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர் தனது தொண்டர்களை ஓட்டுக்களை போட சொன்ன நிலையிலும் விக்ரமன் குறைவான ஓட்டுக்களுடன் அசீமை வீழ்த்த முடியவில்லையே ஏன் என அசீம் ஆர்மியினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

திருநங்கையை மாக் பண்ணவன்
ஒரு டிரான்ஸ் உமனை மாக் பண்ணவன் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் டைட்டில் வின்னரா.. ரொம்ப கேவலமா இல்லை என விஜய் டிவியின் இந்த முடிவை நெட்டிசன்கள் பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அசீம் இந்த டைட்டிலுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவர் ஷோவே ஒரு மோசடி என விளாசி வருகின்றனர்.

பாய்காட் விஜய் டிவி
என்ன வேணாலும் பண்ணலாம்.. இவனுங்க சப்போர்ட் பண்ணி கப் கொடுப்பாங்க.. #boycottvijaytv க்ரிஞ்ச் அசீமை விட கேவலவாதி இந்த விஜய் டிவி இதை முதல்ல பாய்காட் பண்ணனும் என நெட்டிசன்கள் பாய்காட் விஜய் டிவி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறது.

விக்ரமன் ஆர்மி செய்கை
அரசியல் சப்போர்ட் கொடுத்தது தெரிந்த நிலையில் தான் கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு பதில் அசீமுக்கு டைட்டிலை விஜய் டிவி கொடுத்து விட்டதாக விக்ரமன் ஆர்மியினர் விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என ட்ரோல் செய்து ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











