Bigg Boss Tamil 6 Eviction: இந்த முறையும் கணிப்பு மிஸ் ஆகல.. ‘விளிம்பு’ மகேஸ்வரி விடைபெற்றார்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என கணித்திருந்தோமோ அவரே வெளியேறி உள்ளர் என தகவல்கள் கசிந்து விட்டன.
மிக்சர் ராம் தான் வெளியேற வேண்டும் என ரசிகர்கள் பலரும் விரும்பினாலும், பி.ஆர் பலம் அதிகமாக இருப்பதால் அவர் வெளியேற மாட்டார் என நெட்டிசன்கள் உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேறி உள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

கரெக்ட்டான கணிப்பு
இரண்டாம் வாரத்தில் முதல் எவிக்ஷனாக உப்புமா மம்மி சாந்தி தான் வெளியேறுவார் என எதிர்பார்த்ததை போலவே அவர் வெளியேறினார். ஜிபி முத்துவின் ஆர்மியினர் பண்ணிய அட்டகாசம் காரணமாக அவர் அதிரடியாக வெளியேறுவார் எனக் கூறியதை போலவே அவரும் வெளியேறினார். அசல் கோலார் லீலைகள் ரொம்ப நாள் நீடிக்காது என்ற நிலையில், அதிரடியாக தூக்கி வீசப்பட்டார். சீன் போட்ட ஷெரினாவும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார்.

நாமினேஷனில் யார் யார்
இந்நிலையில், இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷனில் வந்துள்ளனர். யார் வெளியே போவார் என்கிற கணிப்பு குறித்து இங்கே நாம் விரிவாக பார்ப்போம். அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரமும் ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் உள்ளிட்ட சிலர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. ரச்சிதா, விஜே கதிரவன், ஷிவின் உள்ளிட்டவரும் சேஃப் ஜோனில் உள்ளனர்.

அசீம், விக்ரமன் சேவ்
விக்ரமன் எப்போ நாமினேஷன் பட்டியலில் வந்தாலும் அவருக்குத்தான் அதிக ஓட்டுக்கள் கிடைப்பது வழக்கம். முதல் ஆளாகவும் அவர் சேவ் ஆகிவிடுவார். ஆனால், இந்த வாரம் விக்ரமன் பல பிரச்சனைகளில் சிக்கி வரும் நிலையில், அசீம் ஆளே மாறிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் அதிக ஓட்டுக்களை போட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன. முதலில் அசீம் சேவ் ஆவார், அடுத்து விக்ரமன் இந்த வாரம் சேவ் செய்யப்படுவார்.

ஆயிஷா எஸ்கேப்
கடந்த வாரம் ஷெரினாவுடன் விளிம்பில் இருந்த ஆயிஷா நான் இப்பவே வீட்டுக்குப் போறேன் என செம டிராமாவை அன்று ஒரு நாள் மட்டும் போட்டார். ஆனால், ஆயிஷாவை இன்னமும் வீட்டில் இருக்க வைக்க வேண்டும் என நினைத்த ரசிகர்கள் அவருக்கு அதிக ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். ஏடிகே மற்றும் ஆயிஷா இந்த வாரம் முன்னதாகவே சேவ் ஆகிவிடுவார்கள்.

தப்பித்த ராம்
இந்த வாரம் அந்த திக் திக் நிமிடங்களை சந்திக்கப் போகும் போட்டியாளர்களில் ஒருவர் வழக்கமான மகேஸ்வரி மற்றும் இன்னொருவர் தூக்க மாத்திரை கொடுக்காத நிலையிலேயே ஷெரினா போல பொய் சொல்லி தூங்கிக் கொண்டிருக்கும் ராம் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. சரியான மிக்சர் பார்ட்டியான ராம் வெளியே கொடுத்து வந்த 2 லட்சம் என்ன ஆச்சு என்பதை விளிம்பு நிலையில் அமரும் போது நிச்சயம் உணர்வார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மகேஸ்வரி எவிக்டட்
கடந்த வாரம் ஷெரினா வெளியேறிய நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜே மகேஸ்வரி தான் வெளியேற போகிறார் என முன்னதாகவே கணித்திருந்த நிலையில், தற்போது அவர் தான் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார் என உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன. நாளை வீட்டை விட்டு போகவில்லையே என ராம் கதறி அழுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











