Bigg Boss Tamil 7: ஆத்தாடி.. வாரிசு பட நடிகர் பிக் பாஸ் வீட்டுக்கு வராரா?.. அப்பாஸுக்கு பதில் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன.
அப்பாஸ் இந்த முறை பிக் பாஸ் சீசனில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ஏமாந்து போக வேண்டாம் அவருக்கு இணையாக அவரை போல இன்னொரு சாக்லேட் பாயை இறக்க பிக் பாஸ் டீம் ரெடியாக இருப்பதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் நடித்த பிரபல நடிகர் தான் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க போவதாக கூறுகின்றனர்.
சன்டே சரவெடி: இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது. இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் செட் போடப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களும் ரசிகர்களை கவரும் விதத்தில் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பல எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் நான் இல்லைப்பா என எஸ்கேப் ஆகி வரும் நிலையில், வாரிசு பட நடிகர் வான்டட்டாக வந்து வண்டியில் ஏறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யாரு அந்த போட்டியாளர்?: நடிகர் அப்பாஸ் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவருக்கு இணையாக ஒரு போட்டியாளரை கடைசி நேரத்தில் பிக் பாஸ் டீம் உள்ளே கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர்.
விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்த நடிகர் ஷாம் தான் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ட்ராங் போட்டியாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள் பெரிதாக இல்லை: 12பி படத்தில் சிம்ரன், ஜோதிகா என இரு ஹீரோயின்களுடன் சினிமாவில் களமிறங்கி, இயற்கை எனும் மிகப்பெரிய மறக்க முடியாத படத்தைக் கொடுத்த நடிகர் ஷாம் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் வில்லன் நடிகராகவும் மாறி விட்டார்.
சமீப காலமாக பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையாத நிலையில், கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிளாட்ஃபாரமாக இருக்கும் எனக் கூறுகின்றனர். நடிகர் ஷாம் வந்தால் ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு அவருக்கு இருக்கும் என்பது கன்ஃபார்ம். இந்த முறை பிக் பாஸ் பஸ்ஸை மிஸ் பண்ணாமல் பிடிக்கிறாரா ஷாம் என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











