Archana: 2 வாரம் தான் இருப்பேன்னு நினைச்சேன்.. பிக் பாஸ் அர்ச்சனா சொன்னதை கேட்டீங்களா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசன் கேள்விக்கு டாப் 5 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் குடும்பத்தினர் வந்து என்ன டிப்ஸ் கொடுத்து விட்டு சென்றார்கள் என்பது குறித்து பேசினார்கள். அர்ச்சனா பேசும் போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது ஒரு 2 வாரம் தாக்கு பிடித்தாலே பெரிய விஷயம் என நினைத்து வந்தேன் என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து அர்ச்சனா தான் டைட்டிலை தட்டித் தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போது வெறும் 2 வாரங்கள் மட்டுமே இருந்தால் போதும் என அவர் பேசியிருபப்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சன் டிவி முதல் பிக் பாஸ் வரை: சன் டிவியில் விஜேவாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா எனும் கதாபாத்திரத்திலேயே நடித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் குவிந்தனர். இந்த சீசனில் வைல்டு கார்டாக உள்ளே நுழைந்த நிலையில், படு போல்டாக பேசி தனது கருத்துக்களை முன் வைத்து கடைசி வரை விளையாடி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் காலரை தூக்கி விட்டு கெத்துக் காட்டி உள்ளார்.
2 வாரம் இருந்தா போதும்: பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து என்ன அட்வைஸ் கொடுத்தனர் என கமல் கேட்க போட்டியாளர்கள் ஆளுக்கொரு பதில் அளித்தனர். அர்ச்சனா பேசும் போது உண்மையா சொல்லணும்னா பிக் பாஸ் வீட்டுக்குள் வரும்போது 2 வாரங்கள் தாக்குப் பிடித்து விட்டு பின்னர் எலிமினேட் ஆகிவிடுவேன் என்று தான் சார் நினைத்தேன். அதற்கு பிறகு இருக்கும் ஒவ்வொரு நாளும் போனஸ் தான். ஆனால், அந்த போனஸ் இதுவரை கொண்டு வந்து சேர்க்கும் என நினைக்கவில்லை சார் என்றார்.
மாயா என்ன சொன்னார்: மேலும், அப்பா சொன்ன விஷயம் என்னவென்றால் நீ எப்படி இருக்கியோ அதே போல இரு அது போதும் என்றார். மேலும், யாரிடமும் கோபப்படக் கூடாது என்றும் சொல்லி விட்டு சென்றார் என பேசினார். அர்ச்சனாவின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் தலைகனமில்லாமல் பேசுகிறார் என்றும் மாயா நான் நல்லா விளையாடினேன். இதுதான் என் கேம் என சொல்வதை கேட்டு கழுவி ஊற்றியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











