Bigg Boss Tamil 7: பிக் பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பப்லு, தர்ஷா குப்தா... கடைசி நேர ட்விஸ்ட்!
சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 இன்று முதல் தொடங்குகிறது.
பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்டும் நேற்று மாலையிலேயே லீக்காகிவிட்டன.
ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பப்லு, தர்ஷா குப்தா உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.
பிக் பாஸில் ஏமாற்றிய பிரபலங்கள்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதனையடுத்து இந்தாண்டுக்கான 7வது சீசன், இன்று முதல் தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7ன் தொடக்க நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று மாலையே பிரம்மாண்டமாக நடந்து முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் ஒரேயொரு பிக் பாஸ் வீடு மட்டுமே உண்டு. ஆனால், பிக் பாஸ் 7வது சீசனில் முதன்முறையாக 2 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று மாலை 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களின் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் லீக்காகிவிட்டன.

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ல் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா ஆகியோர் முதல் மூன்று போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார்களாம். அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், வனிதாவின் மகள் ஜோவிகா, ஐஷூ, மாயா கிருஷ்ணா, சரவண விக்ரம், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாடகர் யுகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பப்லு, நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று மாலை பிக் பாஸ் வீட்டில் பப்லு சென்றுவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல், நடிகை தர்ஷா குப்தாவும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை.
அவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் அப்பாஸ், ஷாம், நடிகைகள் சோனியா அகர்வால், ஸ்ரீதேவி, இந்திரஜா சங்கர், கெளசல்யா ஆகியோரும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், இவர்களும் பிக் பாஸில் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











