Bigg Boss Tamil 7: பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ரேஸில் இருவர்... ரசிகர்கள் சப்போர்ட் யாருக்கு..?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று மாலை முதல் கோலாகலமாக தொடங்கியது. உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

போட்டியாளர்கள் 18 பேரும் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததுமே கேப்டன்ஸி டாஸ்க் சூடுபிடித்தது. இந்நிலையில் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ரேஸில் முதல் நாளிலேயே இரண்டு போட்டியாளர்களுக்கு ரசிகர்களிடம் சப்போர்ட் கிடைத்துள்ளது.

 Bigg Boss Tamil 7: Bigg Boss 7 Title Winner prediction... Pradeep Antony and Yugendran on the race

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் யார்? : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நேற்று மாலை முதல் தொடங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான 7வது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் பிக் பாஸில் இரண்டு வீடுகள் என்ற கான்செப்ட் இந்த சீசனில் தான் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7, முதல் நாளில் இருந்தே சூடு பிடித்துவிட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக கூல் சுரேஷ் என்ட்ரியாக, அவர்தான் இந்த வார கேப்டன் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து உள்ளே சென்ற போட்டியாளர்களுடன் விவாதம் என டாஸ்க் கொடுத்த பிக் பாஸ், கடைசியாக வீட்டுக்குள் அடியெடுத்த வைத்த விஜய் வர்மா தான் கேப்டன் என அறிவித்தார். இதனால், ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது.

பிக் பாஸ் சீசன் 7ல் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா, ஐஷூ, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்பாஸ், ஷாம், பப்லு, பால சரவணன், தர்ஷா குப்தா, உமா ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

முதல் நாளில் இருந்தே தங்களின் ஃபேவரைட் போட்டியாளர்கள் யார் என ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். சோஷியல் மீடியாக்களில் தொடங்கிய இந்த யுத்தம், பிக் பாஸ் வீட்டினுள் என்ட்ரியான போட்டியாளர்களுக்கு மட்டுமே தெரியாது. அதன்படி பெரும்பாலானோரின் ஆதரவு நடிகர் பிரதீப் ஆண்டனிக்கும் பாடகர் யுகேந்திரனுக்கும் தான் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் ஃபைனல் வரை கண்டிப்பாக பயணிப்பார்கள் என்பதே பலரின் விருப்பமும் கணிப்பும்.

அதேநேரம், கூல் சுரேஷ் ரசிகர்களை என்டர்டெயின் செய்தாலும், நீண்ட நாட்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டம் எனக் கூறி வருகின்றனர். அதேபோல், எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை விசித்ரா ஆகியோர் முதல் மூன்று வாரங்களுக்குள் எலிமினேஷன் ஆகிவிடலாம் என்பதும் பலரது கணிப்பாக உள்ளது. பெண் போட்டியாளர்களில் பூர்ணிமா ரவி, வினுஷா தேவி, வனிதா மகள் ஜோவிகா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X