Bigg Boss Tamil 7: “விதிகள் மாறிடுச்சு, விளையாட்டு மாறப் போகுது..” தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது.
அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது களைகட்ட தொடங்கியது.

இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 7வது சீசனில் கமல்ஹாசன் அமர்க்களமாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 மேடையில் கமல் என்ட்ரியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7
தமிழில் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை, விஜய் டிவி டெலிகாஸ்ட் செய்து வருகிறது. ஹாலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை சூப்பர் ஹிட் அடித்த பிக் பாஸ், தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் தற்போது டிஆர்பி-யில் பிக் பாஸ் தான் நம்பர் 1.
இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான 7வது சீசன் இன்று தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7ன் தொடக்க நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக பிக் பாஸின் கிராண்ட் ஓபனிங் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் நேற்று மாலையே நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல கமல்ஹாசன் செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்து பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டியுள்ளார்.
மேலும், போட்டியில் பங்கேற்கவுள்ள 18 போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் வாழ்த்தி வழியனுப்பி வைத்துவிட்டார். இனி தினமும் அடுப்படி சண்டை, 100 நாள் காதல், ரொமான்ஸ், நட்பு, குரூப்பிஸம் என சகலத்தையும் 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம். அதேபோல், இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் ஒரு பிக் பாஸ் வீடு மட்டுமே உண்டு. ஆனால், பிக் பாஸ் 7வது சீசனில் முதன்முறையாக 2 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் விதிகளும் விளையாட்டுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் ஸ்டைலாக என்ட்ரி கொடுக்க, பிக் பாஸ் சீசன் 7 பற்றி ரைம்மிங்காக லீட் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சிக்கான ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமும் அரங்கேறுகின்றன. இன்று மாலை 6 மணி முதல் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பம் என கமல் கூறியது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, இயக்குநர் பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், வனிதாவின் மகள் ஜோவிகா, ஐஷூ, மாயா கிருஷ்ணா, சரவண விக்ரம், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாடகர் யுகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











