Bava Chelladurai: பவா செல்லதுரைக்கு இப்படியொரு பண்ணை வீடு இருக்கா?.. பாலா முதல் ஷங்கர் வரை நட்பா?
சென்னை: பிரபல எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 61 வயதான பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே நாமினேஷனில் வந்திருக்கும் நிலையில், முதல் நாள் இரவே அவர் சொன்ன அந்த ஓட்டம் கதை காரணமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பவா செல்லதுரை ஏகப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அதே போல பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மறைந்த பாலு மகேந்திரா முதல் இயக்குநர் பாலா, ஷங்கர், மிஷ்கின் என பலரும் இவருடன் நட்பு பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

பவா செல்லதுரைக்கு திருவண்ணாமலையில் பத்தாயம் எனும் ஒரு பண்ணை வீடே இருக்கிறது. அந்த இடத்திற்கு தான் சினிமா இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் என பலரும் படையெடுத்து வருவார்களாம்.
எழுத்தாளர் பவா செல்லதுரை: எல்லா நாளும் கார்த்திகை, பஷ்ரின் அறை அத்தனை எளிதில் திறக்கப்படுவதில்லை, டொமினிக், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி எழுத்துலகில் மிகப்பெரிய பிரபலமானவர் பவா செல்லதுரை.

ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஜோக்கர், சீதக்காதி, பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர், நவரசா, ஜெய்பீம், வெந்து தணிந்தது காடு, ரெஜினா மற்றும் பரம்பொருள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பண்ணை வீடு பத்தாயம்: திருவண்ணாமலையில் பத்தாயம் எனும் பண்ணை வீடு பவா செல்லதுரைக்கு சொந்தமாக உள்ளது என சொல்வதோடு சினிமா கலைஞர்களுக்கே சொந்தமான பண்ணை வீடாகவே பத்தாயம் உள்ளது.

பரதேசி படத்தில் பாலா பயன்படுத்திய வண்டி உள்ளிட்ட பல அரிய கலை பொருட்கள் அங்கே உள்ளன. எழுத்தாளர்கள், இயக்குநர்கள் என பலரும் அங்கே வந்து தங்கி கதைகளை பேசி மகிழ்வார்கள் என பேட்டி ஒன்றில் தனது பத்தாயத்தை சுற்றிக் காட்டி பவா செல்லதுரையே கூறியுள்ளார். பவா செல்லதுரை விவசாயத்தையும் பார்த்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

பாலுமகேந்திரா முதல் ஷங்கர் வரை: மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா பவா செல்லதுரையின் எழுத்துக்களை விட அவரது கதை சொல்லல் சிறப்பானதாக உள்ளது என பாராட்டி உள்ளார். பாலுமகேந்திரா வந்து சென்ற இடம் என்பதற்காகவே அவரது சிஷ்யன் பாலா வந்து செல்வார் என்றார் பவா செல்லதுரை. மேலும், மிஷ்கின், நாசர், ஷங்கர் உள்ளிட்ட பலரும் இங்கே வருவார்கள் எனக் கூறி வியப்பில் ஆழ்த்துகிறார்.
பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ள பவா செல்லதுரை பல இயக்குநர்களுக்கு ஆசானாகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்தவரா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் அவரது வீடியோக்களை யூடியூப்களில் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications