Bigg Boss Tamil 7: அடடா! ரச்சிதாவுடன் நெருக்கம்.. ஆயிஷாவின் முன்னாள் காதலர் பிக் பாஸ் 7ல் ஆஜர்!

சென்னை: சின்னத்திரை அமுல்பேபி என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபலம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் உறுதியான போட்டியாளர் லிஸ்டில் இணைந்துள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் முன்னாள் காதலர் மற்றும் காதலிகள் பங்கு பெறுவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆயிஷாவின் எக்ஸ் காதலர் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் என்கின்றனர்.

Bigg Boss Tamil 7 contestant update: Ayesha ex boy friend Vishnu will enter this season

பிக் பாஸ் 7ல் விஷ்ணு: விஜய் டிவியில் வெளியான ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகர் விஷ்ணு. அந்த சீரியலுக்கு பிறகு பல சீரியல்களில் விஷ்ணு தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்தார். ஜீ தமிழில் வெளியான சத்யா சீரியலில் ஆயிஷாவுடன் விஷ்ணு இணைந்து நடித்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஒரே எக்ஸ் தொல்லையா இருக்கே: யாஷிகா ஆனந்தன் முன்னாள் காதலரான நிரூப், நண்பர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவின் சிபாரிசு சிலையை பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ராபர்ட் மாஸ்டர் வனிதா விஜயகுமாரின் சிபாரிசு மூலம் தான் பங்கேற்றதாக வத்திக்குச்சி வனிதாவே ஓபன் செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதாவுடன் சமீபகாலமாக நெருக்கம் காட்டி வரும் விஷ்ணுவுக்கு ரச்சிதாவின் சிபாரிசு மூலமே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Bigg Boss Tamil 7 contestant update: Ayesha ex boy friend Vishnu will enter this season

ரச்சிதாதான் காரணமா?: பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான விஷ்ணு முதல் சீசனில் இருந்து எப்படியாவது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என பலமுறை முயற்சி செய்து வந்த நிலையில் அவருக்கு மிஸ் ஆகி வந்த வாய்ப்புகள் தற்போது கிடைத்திருப்பதாக கூறுகின்றனர்.

தினேஷ் vs விஷ்ணு: இந்த முறை ரச்சிதாவின் கணவர் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே சமயத்தில் உள்ளே நுழைந்தால் செம கன்டென்ட் கிடைக்கும் என்றும் அதன் காரணமாகவே கூட இவரை போட்டியாளராக தேர்வு செய்திருக்கலாம் என்கின்றனர்.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 வீடுகள் இருக்கப் போவதாக கமல் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், இந்த முறை தர்ஷா குப்தா, அப்பாஸ், பப்லு, சோனியா அகர்வால், கெளசல்யா, ரச்சிதாவின் கணவர் தினேஷ், ஸ்ரீதேவி, விஜே ரக்‌ஷன், ஜாக்குலின், குரேஷி, அம்மு அபிராமி உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இதில், ஒரு சிலர் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X