Bigg Boss Tamil 7: மொத்தம் 20 பேர்.. கடைசியா கசிந்த போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான்.. ஆரம்பிக்கலாமா!
சென்னை: Bigg Boss Tamil 7 contestant list (பிக் பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள்) - கடந்த 6 ஆண்டுகளாக கடமை தவறாமல் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நாளை மாலை 6:00 மணி முதல் தொடங்க உள்ள நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
அந்த ப்ரோமோவில் இந்நேரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார் என்பதை யூகித்திருப்பீர்கள், நீங்கள் கெஸ் பண்ண நபர்களே நாளைக்கு வீட்டிற்கு வருகிறார்களா என்பதை பார்ப்போம்? எனக் கூறியுள்ளார்.

20 போட்டியாளர்கள்: இந்நிலையில், கடைசியாக மொத்தம் 20 பேர் கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் கசிந்துள்ளது. அதில், அதிகபட்சம் உறுதியான போட்டியாளர்கள் பலர் இருப்பார்கள் என தெரிகிறது.
நடிகர் பப்லு, நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா, மாடல் நடிகை அனன்யா ராவ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, விஜே அர்ச்சனா, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம், விஷ்ணு, நடிகர் சத்யா மற்றும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் பெயரும் இந்த பட்டியலில் அடிபட்டு வருகிறது.

இந்திரஜா டவுட்டு தான்: ஆனால் நடிகை இந்திரஜா சங்கர் தீவிரமாக தனது திருமணத்திற்காக தயாராகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம்தான் என்கின்றனர்.
மேலும், நடிகர் ஷாம், கூல் சுரேஷ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டு வருகின்றன. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பல போட்டியாளர்கள் இந்த சீசனில் இடம்பெறாமல் வித்தியாசமான போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.
டபுள் தமாக்கா: இரண்டு வீடு கான்செப்ட் இந்த முறை உள்ள நிலையில், ஒரு வீட்டில் 10 போட்டியாளர்களும் இன்னொரு வீட்டில் 10 போட்டியாளர்களும் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களில் ரெண்டு வீடும் ஒன்றாக மாற்றி போட்டியை சுவாரஸ்யப்படுத்துவார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











