Bigg Boss Tamil 7: கூல் சுரேஷ், பப்லு, யுகேந்திரன்... பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் பிரபலங்கள்?

சென்னை: விஜய் டிவியின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 நாளை முதல் தொடங்குகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புள்ளது.

Bigg Boss Tamil 7: Cool Suresh, Babloo, and Yugendran have participated in Bigg Boss season 7

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கூல் சுரேஷ், பப்லு, யுகேந்திரன், ரவீனா தாஹா உள்ளிட்ட சிலர் பிக் பாஸ் வீட்டினுள் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் பிரபலங்கள்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்தாண்டுக்கான 7வது சீசன் நாளை (அக்டோபர் 1) முதல் நடைபெறவுள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்த முறையும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை லைவ்வாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் ஒரெயொரு பிக் பாஸ் வீடு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், பிக் பாஸ் 7வது சீசனில் 2 வீடுகளும் 20 போட்டியாளர்களும் பங்கேற்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் உட்பட பலரும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களில் இறுதியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவர்களில் சிலரது பெயர்கள் தெரியவந்துள்ளது.

Bigg Boss Tamil 7: Cool Suresh, Babloo, and Yugendran have participated in Bigg Boss season 7

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ல் 90ஸ் ஃபேவரைட் நடிகர் பப்லு பிருத்விராஜ் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் சான்ஸ் இல்லாததால் சீரியல்களில் நடித்து வந்த பப்லு, சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்ததாக செய்திகள் வெளியாகின. அவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நடிகர் கூல் சுரேஷும் இந்த சீசனில் பங்கேற்றுள்ளாராம்.

கூல் சுரேஷும் தற்போது சினிமாவில் வாய்ப்பில்லாமல் திரைப்பட ப்ரொமோஷன் நிகச்சிகளில் பங்கேற்று வந்தார். கன்டெண்ட் கண்டெய்னரான கூல் சுரேஷ் இப்போது பிக் பாஸ் வீட்டிலும் செம்ம என்டர்டெயினராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பப்லு, கூல் சுரேஷை தொடர்ந்து பாடகரும் நடிகருமான யுகேந்திரனும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளாராம். இவர் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவிலும் பாடுவதற்கும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 யுகேந்திரனுக்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களுடன் சீரியல் நடிகை ரவீனா தாஹா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X