Bigg boss tamil 7: வினுஷாவை ஜோக்கராக பயன்படுத்தக்கூடாது.. அர்ச்சனாவிற்கு பதிலடி கொடுத்த கமல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது.
இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 69வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
வாரயிறுதி எபிசோடான இன்று கடந்த வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையொட்டி போட்டியாளர்களை கமல் கேள்வி கேட்டதை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறப்பான சீசன்களை கொடுத்து வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 7வது சீசன் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 69வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
வாரயிறுதி எபிசோட் பிரமோ: வாரயிறுதி எபிசோடான இன்றைய நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்களில் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். நிகழ்ச்சிக்கான முதல் பிரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தரமின்றி விளையாடி வருவதாகவும் அதுகுறித்து இன்றைய நிகழ்ச்சியில் பேசலாம் என்று கமல்ஹாசன் பேசியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அர்ச்சனாவிடம் சொருகிடுவேன் என்று நிக்சன் பேசியதற்கான விளக்கத்தை கேட்ட கமல்ஹாசன் அவருக்கு ஸ்டிரைக் கார்டை கொடுத்ததை அடுத்த பிரமோ சுட்டிக் காட்டியது.

வினுஷா குறித்து கமல் கேள்வி: இந்நிலையில் தற்போது மூன்றாவது பிரமோவும் வெளியாகியுள்ளது. இதில் பேசிய கமல்ஹாசன் இது என்ன வினுஷா பிரச்சினை என்று நிக்சனிடம் கேட்கிறார். அதற்கு பதிலளித்த நிக்சன் உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. வினுஷாவிடம் பேசியது குறித்து வெளியில் சென்று அவரது காலில்கூட தான் விழத்தயாராக உள்ளதாகவும் அதை தான் உணர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து பேசிய கமல்ஹாசன், 4 வாரங்களாக பேசப்படாத வினுஷா மேட்டரை தற்போது ஏன் எடுக்க வேண்டும் என்று அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பினார்.
வினுஷாவை ஜோக்கராக்கக்கூடாது: தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அர்ச்சனா தன்னை பாதுகாத்துக் கொள்ள வினுஷா இல்லை என்பதையும் கோபத்துடன் தெளிவுப்படுத்தினார். அந்தப் பெண்ணும் நிக்சனும் நெருக்கமானதால்தான் ஐஷு வெளியில் சென்றுவிட்டதாக அர்ச்சனா கூறியதையும் சுட்டிக் காட்டிய கமல்ஹாசன், இருவரும் இல்லாத நிலையில் அவர்கள் குறித்து பேசியது தவறு என்றும் குறிப்பிட்டார். அர்ச்சனாவிற்கு சீட்டு சேராதபோது அவர்களை ஜோக்கராக பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

அர்ச்சனாவிற்கு பதிலடி: அந்த பேச்சில் இல்லாதது குறித்து அர்ச்சனா பேச முயல, அந்த பேச்சில் அவர் இல்லாதபோது எதற்காக இடையில் நுழைந்தார் என்றும் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், உப்புமா நன்றாக இருந்தால் அதை சாப்பிட்டிருக்கலாமே என்றும் அர்ச்சனாவின் கடந்த வார பேச்சுக்களுக்கு பதிலடி கொடுத்தார். கடந்த சில தினங்களாக நிக்சன் மற்றும் அர்ச்சனா இருவரும் தங்களை மாற்றி மாற்றி கேவலப்படுத்தி பேசிய நிலையில் ரசிகர்கள் இந்தப் பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











