எதே ப்ரோமோ பொறுக்கியா?.. விஷ்ணுவை ட்ரிக்கர் செய்த தினேஷ்.. பிக் பாஸ் வீடே சும்மா வெடிக்குது!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வீடு ரெண்டானா சண்டையும் ரெண்டாகும் என கமல் ப்ரோமோவில் சொன்னது போலத்தான் இந்த சீசனே சண்டை சீசனாக மாறியுள்ளது.
போட்டியாளர்கள் அனைவருமே எப்போடா சான்ஸ் கிடைக்கும் சண்டை போடலாம் என மாறி உள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில், தற்போது இந்த வாரத்துக்கான கன்டென்ட்டுக்காக தினேஷும் விஷ்ணுவும் அடிக்காத குறையாக சண்டை போட்டுக் கொண்ட 2வது ப்ரோமோ தற்போது வெளியானது.

ப்ரோமோ பொறுக்கி: ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் தினேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த நிலையில், அவர் ஆம்பளையான்னே சந்தேகமா இருக்கு என ஜோவிகா அசிங்கப்படுத்திய நிலையில், தற்போது விஷ்ணுவிடம் சண்டை போட்டுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிலும், வந்துட்டாரு ப்ரோமோ பொறுக்கி என தினேஷ் விஷ்ணுவை பார்த்து சொன்னதும் சண்டை ஸ்டார்ட் ஆகி விட்டது.
ப்ரோமோவுக்காக சண்டை: விஷ்ணு பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்ததில் இருந்தே ப்ரோமோவுக்காக சண்டை போடுகிறார் விஷ்ணு என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தாலும், எல்லாருமே ப்ரோமோவுக்காகத் தான் சண்டை போடுகின்றனர் என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால், வரம்பு மீறி அவரை பொறுக்கி என எப்படி சொல்லலாம் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த மிதி உனக்கு விழும்: நான் ப்ரோமோ பொறுக்கியா? என கோபத்தில் தினேஷை அடிக்காமல் அருகே இருந்த பொருளை எட்டி உதைத்த விஷ்ணு இந்த மிதி உனக்கு விழும் என வழக்கம் போலவே ஸ்க்ரிப்டட் வாய் சண்டையே போட்டு 2வது ப்ரோமோவை பரபரப்பாக்கி உள்ளனர்.
உண்மையா இருந்தா நடக்குறதே வேற: இதெல்லாம் வெளியே நடந்திருந்தாலோ உண்மையாக இருந்திருந்தாலோ நடக்குறதே வேற என்றும் சண்டை போட்டாலும் எல்லை கோட்டுக்குள் சண்டை டிராமா போடுறது எல்லாம் சீரியல் நடிகர்களுக்கு மட்டுமே கை வந்த கலை என்றும் அதனால் தான் விஜய் டிவி சீரியல் நடிகர்களையே பிக் பாஸ் போட்டியாளர்களாக இறக்கி வருகின்றனர் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











