Bigg Boss Tamil 7: தாறுமாறா பிக் பாஸுக்கு தயாராகுறாரு போல தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் வீடியோ பாருங்க!

சென்னை: அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தர்ஷா குப்தாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பார்ப்போம் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கும் நிலையில், இந்த வீக்கெண்டை என்னோட வீடியோவுடன் என்ஜாய் பண்ணுங்க என தர்ஷா குப்தா லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வார இறுதி நாளை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளார்.

முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்றார்.

Bigg Boss Tamil 7 expected contestant Dharsha Gupta latest gorgeous video out now

குக் வித் கோமாளி டு பிக் பாஸ்: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். யோகி பாபுவின் மெடிக்கல் மிராக்கல் படத்தில் நடித்துள்ள தர்ஷா குப்தாவுக்கு பெரிய படங்கள் வராத நிலையில் மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bigg Boss Tamil 7 expected contestant Dharsha Gupta latest gorgeous video out now

தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் வீடியோ: பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக நடிகை தர்ஷா குப்தா பங்கேற்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களையும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆக்டிவ் மோடுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

Bigg Boss Tamil 7 expected contestant Dharsha Gupta latest gorgeous video out now

சுமார் 22 லட்சம் பேர் தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ பண்ணி வரும் நிலையில் அவர்களின் ஓட்டு கிடைத்தாலே எளிதில் இந்த நிகழ்ச்சியை தர்ஷா குப வென்று விட முடியும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் அப்சரஸ் போல ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்த தர்ஷா குப்தா அதன் வீடியோவை தற்போது வெளியிட்டு மேலும் இணையத்தை ஹீட்டாக்கி உள்ளார். தர்ஷாவின் பேரழகை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X