அச்சச்சோ.. அந்த 2 கனவுக்கன்னிகளையும் அலேக்காக தூக்கிட்டாங்களே.. அப்போ பிக் பாஸ் தமிழ் 7 நிலைமை?
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பரீட்சையமான நடிகைகள் ஷகீலா மற்றும் கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டது தமிழ் பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை நடிகை கிரண் மற்றும் நடிகை சகிலா பங்கு பெறுவார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 க்கு போட்டியாளர்களாக சென்று விட்டனர்.
இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் பல பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் இந்த முறை நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என சமீபத்தில் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கிரண், ஷகீலா: அதில் நடிகை கிரண் மற்றும் ஷகிலாவின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த இருவருமே அதிரடியாக இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக கலந்து கொண்டது தமிழ் பிக் பாஸ் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்போ இந்த முறையும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி ப்ராடக்ட் களின் ஆதிக்கம் மட்டுமே நிறைந்து இருக்குமா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பிரபலமான நடிகைகளை போட்டியாளர்களாக பங்கேற்க வைத்து நிகழ்ச்சி டிஆர்பி யில் டாப்பில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் நடிகர் நாகார்ஜுனா.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி: ஆனால் கடந்த சில சீசன்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்கள் பங்கேற்காதது ரசிகர்களை அந்த நிகழ்ச்சியுடன் தடுப்பதாக கூறுகின்றனர் விமர்சனங்கள் இழந்த நிலையில் எழுந்த நிலையில் இந்த முறையும் கவர்ச்சி கன்னிகள் ஆன ஷகிலா மற்றும் கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டது தமிழ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.

அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு இந்த முறை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை களம் இருக்குமா பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். செப்டம்பர் மாதமே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் அக்டோபர் மாதம் டான் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 ஆரம்பிக்கும் என தெரிகிறது.
நடிகர் அப்பாஸ், கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, பப்லு, ரேஷ்மா நாயர், ரச்சிதா கணவர் தினேஷ், விஜய் டிவி ஜாக்குலின், விஜே பார்வதி, விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்டில் எத்தனை விசாகப் போகிறதோ என்கிற டவுட் ரசிகர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











