கண்டபடி கட்டிப்புடிக்கிறாரே நிக்சன்.. ஐஷு போனவுடன் பூர்ணிமாவுடன் நெருக்கம்.. மாயா மூஞ்சே சரியில்லை!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 சீக்கிரம் முடியப் போகும் நிலையில், ஐஷு போனால் என்ன அடுத்து அக்கா என அழைத்த பூர்ணிமாவுடனாவது ஜாலியாக இருக்கலாமே என நிக்சன் பண்ணும் அட்டூழியங்கள் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை போல இன்னும் போர்வைக்குள் கபடி விளையாடாதது ஒன்று தான் குறை. முதல் சீசனில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியர் என கலாய்க்கப்பட்டதெல்லாம் நிக்சன் பண்ணும் லீலைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை.
ஐஷு வெளியேறிய பின்னர் அடுத்த ஆளை தேடி வந்த நிக்சன் தற்போது பூர்ணிமாவை கண்டபடி கட்டிப்பிடித்து வருகிறார். அதை மாயா பார்க்கும் பார்வையே சரியில்லையே என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மாயா கூட இருந்த பூர்ணிமா: ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் மாயாவுடன் பூர்ணிமா ஒட்டிக் கொண்டு இருந்தது எப்படியும் அவரது நிழலில் நாமும் கமல் சாரிடம் இருந்து தப்பித்து விடலாம் என்கிற ஸ்ட்ராட்டஜியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாயாவும் பூர்ணிமாவும் இணை பிரியா தோழிகளாக இருந்து வந்த நிலையில், தற்போது பூர்ணிமாவை சுற்றி சுற்றி வரத் தொடங்கி உள்ளார் நிக்சன்.
கண்டபடி கட்டிப்புடிக்கும் நிக்சன்: ஐஷு இருந்தவரை அவர் பின்னாடி சுற்றிக் கொண்டு கட்டிப்பிடித்துக் கொண்டும் முத்தம் கொடுத்து கொண்டும் மடியில் படுத்துக் கொண்டும் அலப்பறை செய்து வந்த நிக்சன் தற்போது பூர்ணிமாவுடன் அப்படி ஐக்கியமாகி உள்ளார். அதிலும் படு மோசமாக கண்டபடி கட்டிப்பிடித்து வருகிறார் நிக்சன் என்றும் பூர்ணிமா இடியட் என்றெல்லாம் திட்டியும் அவர் திருந்துவது போல தெரியவில்லை என்கின்றனர்.
இந்த வாரம் எஸ்கேப்: இந்த வாரம் கூல் சுரேஷுக்கு பதில் நிக்சன் தான் எவிக்ட் ஆகியிருக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் வழக்கம் போல பிக் பாஸ் டீம் நிக்சனை காப்பாற்றி கூல் சுரேஷை வெளியே அனுப்பி விட்டது என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடைசி வரை நிக்சன் இந்த ஷோவில் தொடர்வார் என்றும் மாயாவுக்குத் தான் டைட்டில் போகப் போகிறது என்றும் கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள் சீக்கிரம் இந்த சீசனை முடிங்க பாஸ் முடியல என்றும் கும்பிடு போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











