நாய் சேகராக மாறிய நிக்சன்.. ரவுடின்னு உதார் விட்டுட்டு இப்படி ஜர்க் கொடுக்கிறாரே.. பறக்கும் மீம்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் இதுபோல பெண்களுடன் ஒட்டி உரசி பழகுபவர்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். முதல் சீசனில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடி வைத்தியர் என கமெண்ட் போட்டு கலாய்த்த பிக் பாஸ் ரசிகர்கள் தமிழ் பாவனியை துரத்தி துரத்தி லவ் பண்ணும் போது அப்செட் ஆன ரசிகர்கள், அசல் கோளாறு நிவாஷினியை தடவ ஆரம்பித்ததும் எரிச்சல் அடைந்த ரசிகர்கள் தற்போது ஐஷுவிடம் அத்துமீறி பழகும் நிக்சனை ஆபாசமான பெயர் கொண்டு அழைக்கும் அளவுக்கு சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் நிக்சன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லா பேசுறான் என அவனுக்கு ஃபயர் விட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் தான் தற்போது நிக்சனை காஜி என்றும் வக்கிர புத்திக் கொண்டவன் என்றும் தடவல் மன்னன் என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அலையும் நிக்சன்: அக்கான்னு சொல்லு என ஐஷூ சொன்னாலும் நிக்சனால் தனக்கு சேஃப்டி இல்லை என பிரதீப் ஆண்டனிக்கு எதிராக குரல் கொடுத்தது போல ஏன் இன்னும் கொடுக்காமல் அவனுக்கு இடம் கொடுத்து வருகிறார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
பெண் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனியை வெளியேற்றுவதில் நிக்சன் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரையே வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
நாய்க்கு மட்டும் பயம்: சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல்ல படிக்கும்போது தான் எவ்வளவு பெரிய ரவுடி என்றும் யாராவது அடிச்சா திருப்பி அடி கொடுக்கிற அளவுக்கு ரவுடி என்றும் அவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க என்றும் மாஸாக பேசி வந்த அவரது கெத்தை நொறுக்க வேண்டும் என நினைத்த பிக் பாஸ் நாயைக் குரைக்க விட்டதும் நிக்சன் பயந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு நாய்க்கு மட்டும் தான் இவர் பயப்படுவார் மத்தபடி இவரும் ரவுடி தான் வண்டில ஏத்துங்க என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











