Bigg Boss Tamil: சிங்கிளில் இருந்து மிங்கிளாக துடிக்கும் பெண் போட்டியாளர்கள்.. இது பிக் பாஸா.. இல்லை வேற ஷோவா?
சென்னை: டேட்டிங் ஷோவா? பிக் பாஸ் ஷோவா? என்கிற சந்தேகமே முதல் எபிசோடிலேயே எழுந்துள்ளது. அந்த அளவுக்கு உள்ளே வரும் பெண் போட்டியாளர்கள் நாங்கள் சிங்கிள் என்றும் மிங்கிளாக துடிக்கிறோம் என்றும் உள்ளே நுழையும் போதே அறிவிப்பு பலகையுடன் வருகை தந்துள்ள நிலையில், இந்த சீசனில் பிக் பாஸ் எடிட்டர் காதல் பாடல்களை கன்னா பின்னாவென போடுவார் என தெரிகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

ஏற்கனவே கசிந்த அதே போட்டியாளர்கள் வரிசை கூட மாறாமல் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மிங்கிளாக ஆசை: பூர்ணிமா ரவி, 19 வயது ரவீனா தாஹா, வினுஷா தேவி என வரிசையாக வந்த போட்டியாளர்கள் எல்லாம் சிங்கிள் என்று சொல்லி வருகின்றனர். இதில், சிங்கிளாகவே இருக்க வேண்டும் என நினைக்கவில்லை என்றும் மிங்கிளாக ரெடி என்றும் போட்டியாளர்கள் பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரவீனா - மணிச்சந்திரா: ஏற்கனவே ரவினா தாஹா மற்றும் மணிச்சந்திரா பல இடங்களில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் இளம் காதல் ஜோடிகளாக சுற்றுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது. வந்த ஆரம்பத்திலேயே யாரையும் கட்டிப் பிடிக்காத ரவீனா மணிச்சந்திரா வந்தததும் அவரை கட்டி அணைத்து வரவேற்றார்.
வேற ஷோவா?: இது பிக் பாஸ் வீடா? அல்லது வேற ஷோவா? என்றே நெட்டிசன்கள் இளம் பெண் போட்டியாளர்கள் நாங்கள் சிங்கிளாக இருக்கிறோம். மிங்கிளாக ரெடியாக இருக்கிறோம் எனக் கூறியதை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.
மேலும், இந்த சீசனில் பல இளம் போட்டியாளர்கள் பங்கேற்று வரும் நிலையில், நிகழ்ச்சி செம கலர்ஃபுல்லாகவும் டஃப் ஆகவும் இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











