Bigg Boss Tamil 7 Contestants: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் இவங்கதானாம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், நேற்று அதன் ஷூட்டிங் நடைபெற்றது.

நள்ளிரவு வரை சென்ற ஷூட்டிங்கின் முடிவில் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த முறை யாரெல்லாம் சென்றுள்ளனர் என்பது குறித்த முழு 18 பேர் கொண்ட பட்டியல் தற்போது இணையத்தில் வழக்கம் போல கசிந்துள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியுடன் பட்டையை கிளப்பும் பர்ஃபார்மன்ஸை கொடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 18 பேர் பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்..

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

கூல் சுரேஷ்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நபராக உள்ளே நுழைந்திருப்பது வெந்து தணிந்தது காடு பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என அதகளப்படுத்தும் போட்டியாளர் கூல் சுரேஷ். சமீபத்தில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷுக்கு சர்ச்சை நாயகன் என்கிற கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டுக்கு நுழைய அனுமதி கிடைத்ததா? அல்லது சிம்பு நண்பர் என்பதால் கிடைத்த சிபாரிசா என தெரியவில்லை. சென்ற முறை ஜிபி முத்து உள்ளே போனது போல இந்த முறை கூல் சுரேஷை முதல் போட்டியாளராக உள்ளே அனுப்ப முடிவு செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

'அராத்தி' பூர்ணிமா ரவி: டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி நரிக்கூட்டம் யூடியூப் சேனல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அராத்தி எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து இவர் செய்த காமெடி சேட்டைகள் பலரையும் ஈர்த்து சில குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தன. பிக் பாஸ் வீட்டுக்கு 2வது போட்டியாளராக இவர் உள்ளே நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

ரவீனா தாஹா: 3வது போட்டியாளராக மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹா உள்ளே நுழைந்திருப்பதாக ஒற்றர்கள் செய்தி அனுப்பி உள்ளனர். ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்த இவர் ஏகப்பட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பிரதீப் ஆண்டனி: 4வது போட்டியாளராக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளாராம். அருவி படத்தின் உதவி இயக்குநரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி வாழ், டாடா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து பெருசா சாதிக்க முடியாத நிலையில், கவினின் நண்பரான இவர் பிக் பாஸ் பிளாட்ஃபார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

நிக்ஸன்: போன சீசனில் ஏடிகே உள்ளே சென்றதை போல இந்த சீசனிலும் பாட்டுப் பாட ஒருத்தர் வேண்டும் என்பதால் ராப் பாடகர் நிக்ஸனை உள்ளே 5வது போட்டியாளராக அனுப்பி உள்ளார்களாம்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

வினுஷா தேவி: பாரதி கண்ணம்மா 2 சீரியல் பாதியிலேயே நின்ற நிலையில், வாய்ப்புத் தர நாங்க இருக்கோம் என பிக் பாஸ் வீடு நடிகை வினுஷா தேவியை 6வது நபராக உள்ளே அழைத்துக் கொண்டதாம்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

மணிச்சந்திரா: அமீர், ராபர்ட் மாஸ்டர் வரிசையில் இந்த முறையும் நடன கலைஞர் ஒருவரை உள்ளே அனுப்பி உள்ளனர். மணிச்சந்திரா என்கிற இந்த போட்டியாளர் 7வதாக உள்ளே நுழைந்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

அக்‌ஷயா உதயகுமார்: இந்த சீசனில் இளைஞர்களை கவர ஏகப்பட்ட மாடல்களும் சின்னத்திரை நடிகைகளும் களமிறங்கி உள்ளனர். லவ் டுடே படம் மற்றும் மலையாள படமான சித்தி படத்தில் இவர் நடித்துள்ளார். 8வது நபராக கமல்ஹாசனின் வாழ்த்துக்களை பெற்று பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

ஜோவிகா விஜயகுமார்: 3வது சீசன் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு அதிரடி கிளப்பிய வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார். பாவம் என்ன என்ன ட்ரோல்களுக்கு ஆளாக போகிறார் என்று தெரியவில்லை. 9வது நபராக உள்ளே நுழைந்திருக்கிறாராம்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

ஐஷு: 10வது நபராக அமீரின் உறவினரான ஐஷு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளாராம். நடன கலைஞரான இவர் டான்ஸ் vs டான்ஸ் போட்டியிலும் ஏற்கனவே பங்கேற்றுள்ளார்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

மாயா கிருஷ்ணன்: விக்ரம் படத்தில் ஆ.. ஹூ.. என சவுண்ட் போட்டே ரசிகர்களை வசீகரித்த நடிகை மாயா கிருஷ்ணன் 11வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

சரவண விக்ரம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சரவண விக்ரம் எப்படியாவது ஹீரோவாகி விடலாம் என்கிற முயற்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் 12வது நபராக நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

விசித்ரா: முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்த விசித்ரா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி புராடக்ட்டாகவே மாறிய நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு 13வது நபராக என்ட்ரி கொடுத்துள்ளார். எத்தனை வாரங்கள் தாக்குப் பிடிப்பார் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

பவா செல்லதுரை: பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை இந்த முறை திடீர் சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டுக்குள் 14வது போட்டியாளராக நுழைந்திருக்கிறார். ஆனால், இவரும் எத்தனை வாரங்கள் உள்ளே இருப்பார் என்பது கேள்வி குறிதான்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

அனன்யா ராவ்: கன்டென்ட் க்ரியேட்டரான அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டுக்கு 15வது போட்டியாளராக வந்திருப்பதாக கூறுகின்றனர். நெட்பிளிக்ஸின் இன் ரியல் லவ் சீரிஸ் மூலம் பிரபலமானவர். அழகான போட்டியாளரை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு கிடைத்த செம ஆஃபர்.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

விஜய் வர்மா: 16வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் விஜய் வர்மாவும் ஒரு நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ இந்த முறை டெய்லி காலையில டான்ஸ் ஷோ கன்றாவியா இருக்காது.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

விஷ்ணு விஜய்: ஆபிஸ், சத்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமுல் பேபி விஷ்ணு விஜய் 17வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil 7 final confirmed 18 contestants list leaked

யுகேந்திரன்: பாடகர் யுகேந்திரன் 18வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறாராம். பப்லு பிரித்விராஜ், தர்ஷா குப்தா, இந்திரஜா, ஷாம், அப்பாஸ், சோனியா அகர்வால், ஸ்ரீதேவி, கெளசல்யா உள்ளிட்ட பல பிரபல பெயர்கள் அடிபட்ட நிலையில், அவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. இதே ஆர்டரில் போட்டியாளர்கள் வருவார்களா? அல்லது சிறிது மாற்றங்கள் நடக்குமா என்பதை இன்று மாலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்போம்..v

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X