Bigg Boss Tamil 7: அப்போ சண்டையும் ரெண்டாகிடும்.. பிக் பாஸ் சீசன் 7 எப்போ ஆரம்பம் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த அட்டகாசமான ப்ரோமோ வீடியோவுடன் கமல் வந்து விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ள தேதி குறித்த உறுதியான தகவல்களும் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன் களாக ஒளிபரப்பாகி வெற்றி அடைந்த நிலையில் ஏழாவது சீசன் எப்போது துவங்கும் என்கிற கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

Bigg Boss Tamil 7 Grand Launch date locked details are here

சண்டையும் ரெண்டா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோவில் வீடு ரெண்டு ஆயிட்டா அப்போ ரெண்டு கன்ஃபெஷன் ரூம், ரெண்டு ஸ்விம்மிங்பூல், அப்போ சண்டையும் ரெண்டா என தர லோக்கல் கமல் கேட்க, சண்டையை மட்டும் ஏன் நினைக்கிறீங்க, சந்தோஷமும் ரெண்டாக இருக்கலாமே என பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் கூறுகிறார்.

போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு சந்தோஷமா இருந்தா யாரு சார் பார்ப்பா பிக் பாஸ் ஷோவை, சண்டை போட்டு அடிச்சிட்டு கிடந்தாதான்ன உங்களுக்கே பஞ்சாயத்து பண்ண வேலை என நெட்டிசன்கள் அந்த புரமோவை பார்த்து நக்கலடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் 7 ஆரம்ப தேதி: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதியே ஆரம்பமாகப் போவது உறுதியாகி விட்டது என்றும் விரைவில் அதற்கான ஷூட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் தற்போது காத்துவாக்குல கசியத் தொடங்கி வருகின்றன. அதில், இந்த முறை அதிகபட்சமாக 5 விஜய் டிவி புராடக்ட்டுகள் வரப் போவதாகவும் கூறுகின்றனர்.

சர்ப்ரைஸ் இருக்கு: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் ஷகீலா, கிரண் என கிளுகிளுப்பான போட்டியாளர்களை களமிறக்கி வரும் சூழலில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதே போல லட்டு போட்டியாளர்கள் எல்லாம் வருவார்களா இல்லை இந்த முறையும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகள் மட்டுமே கலந்து கொண்டு கடுப்பேற்றுவார்களா? என்கிற கேள்விகளையும் பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

எப்படியும் இந்த முறை கண்டிப்பாக சர்ப்ரைஸ் இருக்கும் என்றே நெருங்கிய வட்டாரங்கள் உறுதியளித்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7ஐ எதிர்நோக்குவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X