Big Boss Tamil 7: பிக்பாஸ் 7 - வீட்டுக்குள் அலப்பறை கெளப்ப ரெடியாகும் அராத்தி.. பூர்ணிமா ரவி யார் தெரியுமா?

சென்னை: Big Boss Poornima Ravi (பிக்பாஸ் பூர்ணிமா ரவி) பிக்பாஸ் ஏழாவது சீசனில் யூட்யூபரும், நடிகையுமான பூர்ணிமா ரவி கலந்துகொள்ளவிருக்கிறார்.

டிவி ஷோக்களில் ரொம்பவே பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்று முதல் ஏழாவது சீசன் தொடங்கவிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆனாலே மற்ற சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கும் நிலை உருவாகும். எனவே அதனை தக்க வைப்பதற்காக இந்த சீசனில் பல புது முயற்சிகளை சேனல் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த முறை இரண்டு வீடுகளில் போட்டி நடக்கவிருக்கிறது.

Here is the Unknown Details about Big Boss 7 Contestant Poornima Ravi

போட்டியாளர்கள்: பிக்பாஸ் சீசன் 7க்கான போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று கசிந்துள்ளது. அதில், கூல் சுரேஷ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, விஜே அர்ச்சனா, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், யூட்யூபர் பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தெரிகிறது.

யார் இந்த பூர்ணிமா?: இந்த லிஸ்ட்டில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் பூர்ணிமா ரவி. 1995ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த அவர் அங்கேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு விஐடியில் கல்லூரி படிப்பை முடித்தார். ஐடி கம்பெனி ஒன்றில் 25,000 ரூபாய் மாத சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவருக்கு நடிப்பு மீது ஆர்வம் பிறந்தது.

யூட்யூபர்: இதனையடுத்து அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கினார். அதில் தனது நடன வீடியோக்கள் க்ரியேட்டிவான வீடியோக்களை பதிவேற்றினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி அவரது வீடியோக்களை ட்ரெண்டாக்கவும் செய்தனர்.

Here is the Unknown Details about Big Boss 7 Contestant Poornima Ravi

குறும்படம்: யூட்யூப் மூலம் கிடைத்த ரெஸ்பான்ஸை அடுத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமான ஹே சண்டைக்காரி உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்தார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த பூர்ணிமா ரவிக்கு ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் மூலம் கோலிவுட் கதவு திறந்தது.

தாக்குப்பிடிப்பாரா?: அந்தப் படத்தில் பால சரவணனுக்கு தங்கையாக நடித்தார். இதையெல்லாம் வைத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செலக்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. 28 வயதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பூர்ணிமா 100 நாட்கள் தாக்குப்பிடித்து டைட்டிலை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X