பவா செல்லதுரையை பங்கம் பண்ண ஜோவிகா.. அய்யா இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா என கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் விட வயதில் சிறுமியாக இருந்தாலும் வனிதா மகள் என்பதை நிரூபிக்கும் விதமாக சும்மா படமெடுக்கும் பாம்பாக சீறி வருகிறார் ஜோவிகா. இது அவருக்கு எந்தளவுக்கு போட்டியிலும் வாழ்க்கையிலும் கை கொடுக்கும் என்பது சந்தேகமான ஒன்று தான்.
பிக் பாஸ் வீட்டிலேயே வயதானவரும் பிரபல எழுத்தாளரும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் மதிக்கக் கூடிய பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டுக்குள் வர ஆசைப்பட்டு இப்படி சின்ன பொண்ணுக்கிட்ட அசிங்கப்படுறாரே என அவரது ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

பிரபல எழுத்தாளர்: பிரபல எழுத்தாளரும், கதை சொல்லியும் பல படங்களில் நடித்துள்ளவருமான பவா செல்லதுரை இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் சொல்லும் கதைகளை கேட்டு போட்டியாளர்கள் சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என தூங்க ஆரம்பிக்கும் காட்சிகளை போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தடுமாறிய பவா: இடுப்பு மேட்டர் பத்தி கதை சொல்றேன்னு பிக் பாஸ் வீட்டில் முதலில் சொன்ன ஓட்டம் கதை அளவுக்கு ஸ்ட்ராங்காக சொல்லாமல் சொதப்பிய நிலையில், ஜோவிகா, மாயா, விஷ்ணு உள்ளிட்ட பலரும் பிழை கதையிலேயே பிழையை கண்டு பிடித்து கலாய்த்து விட்டனர். அதற்கு விளக்கம் சொல்லி பவாவை காப்பாத்துறேன்னு கமல் சார் சொன்ன ஒரு கதை நைட் 11 மணிக்கு நல்ல தூக்கத்தை வரவழைத்து விட்டது.
பவாவை பங்கம் பண்ண ஜோவிகா: சூப்பரா பேசுனம்மா என ஜோவிகாவை ஊக்கப்படுத்துவது போல நினைத்து சீனியரான பவா கை கொடுக்க நினைக்க, சீனியர்னாலே சீறிப் பாயும் பாம்பாக வளர்ந்துள்ள ஜோவிகா வேண்டாம் என அவாய்டு பண்ண காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
குவியும் ட்ரோல்கள்: டைம் இல்லை என்றும், சத்ய சோதனை என்றும் எச்சில் துப்பிட்டா என்ன பண்றதுன்னு என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு பவா செல்லதுரையை கலாய்த்து வருகின்றனர். அய்யா உங்களுக்கு இது தேவையா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











