Bigg Boss 7 Tamil: சவுக்கடி கொடுக்க மாட்டேன்.. ஆரம்பத்திலேயே அலர்ட் மெசேஜ் கொடுத்த கமல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்து 7 சீசன்களையும் தொகுத்து வழங்கி உள்ள கமல்ஹாசனுக்கே இந்த சீசன் ரொம்ப டஃப் ஆக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு எதிராக கிளம்பின. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் கருப்பு நிற உடையில் தாறுமாறாக ரெண்டு சைட்ல ஜிப் வைத்த உடையை அணிந்துக் கொண்டு கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலும் கெத்துக் காட்டி பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை இத்தனை சீசன் தொகுத்து வழங்கிய கமல் இதற்கு முன் இருந்த போட்டியாளர்களுக்கும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு நிகழ்ச்சியை அலர்ட் மெசேஜ் உடனே கிராண்ட் ஃபினாலேவை ஆரம்பித்தார்.

கமலையே சிக்க வைத்த புல்லி கேங்: இந்த சீசனில் பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதிப்பு என செங்கொடியை உயர்த்திய புல்லி கேங்கை சேர்ந்தவர்கள். கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதும் அதற்காகவே பல குறும்படங்கள் எல்லாம் போட்டுக் காட்டி நீங்கள் சொல்லித்தான் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பினேன் என கமல் விளக்கம் கொடுத்தார்.
புதிய தலைமுறை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லாம் பழைய தலைமுறை என்றும் இப்போ இந்த சீசனில் வந்தவர்கள் எல்லாம் புதிய தலைமுறை போட்டியாளர்கள் என்றும் கூறியுள்ளார். முன்பெல்லாம் ஏதாவது தவறு செய்தால் மன்னிச்சுடுங்க சார் என்று சொல்வார்கள். ஆனால், இந்த சீசனில் ஏதாவது தவறு செய்தால் அதுதான் என் ஸ்ட்ராட்டஜி என விவகாரமாக பேசி அசத்துகின்றனர்.
சவுக்கடி கொடுக்க மாட்டேன்: தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்க சொல்கின்றனர். ஆனால், அது என் வேலை இல்லை. தட்டிக் கேட்பது கூட என் வேலை இல்லை. சுட்டிக் காட்டுவது மட்டுமே என் வேலை என்றும் சோஷியல் மீடியாவில் வரும் ட்ரோல்கள் எல்லாம் நேரில் அதே நபர்கள் பார்த்தால் புன்னகைப்பார்கள் என பேசி அசத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











