BB7: வயசானவர வெளியே அனுப்புங்க.. ஒன்றுகூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. அடுத்த வாரம் சிக்குவாரா?

சென்னை: Bigg Boss Tamil 7 - பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷன் வாரத்தில் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும் பவா செல்லதுரை வீட்டில் கதை சொல்லிட்டு அவர் பாட்டுக்கும் ஒரு ஓரமா தூங்கப் போயிடுறாரு, யாருக்குமே உதவியா இல்லை, அவருக்கு வயசானதால அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து முதல் எவிக்‌ஷன் அவர் தான் என அடித்து சொன்னது அடுத்த வாரத்தில் மக்கள் வாக்குகளில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல எழுத்தாளரான பவா செல்லதுரைக்கு அதிகப்படியான வாசகர்கள் வெளியே இருப்பதால் தான் அவர் இந்த வாரம் அதிக ஓட்டுக்களை அள்ளி காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Bigg Boss Tamil 7 Majority housemates targets Bava Chelladurai

அடுத்த வாரமும் பலரும் பவாவை நாமினேட் செய்வார்கள் என தெரிகிறது. இப்போதே சின்ன வீட்டுக்கு அவரை பெட்டி படுக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப சொல்லிட்டாரு புதிய கேப்டன் சரவண விக்ரம்.

வயசானவங்க விளையாடக் கூடாதா: பிக் பாஸ் விளையாட்டு வயதானவர்களான விளையாட்டு அல்ல என்றே போட்டியாளர்கள் ஒருமித்த குரலுடன் முடிவு செய்வது சரியான போட்டியாளர்கள் யாருமே உள்ளே இல்லை என்பதை தான் காட்டுகிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். நாட்டை ஆள்வதே வயதானவர்கள் தான். பிக் பாஸ் வீட்டை வயதானவர்கள் ஆடி வெல்ல முடியாதா என பவா செல்லதுரைக்கு ஒரு தரப்பில் ஆதரவு இதன் காரணமாகவே குவிந்து வருகிறது.

பவா வேலை செய்றார்: முதல் வார கேப்டனான விஜய் வர்மா பவா சார் முதல் இரண்டு நாள் தான் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார். பாத்திரங்கள் எல்லாம் கழுவினார். தொடர்ந்து வேலைகளை செய்ய இறங்கி வருகிறார் என்று பாராட்டி இருந்தார்.

அடுத்த வார பலி ஆடு: இந்த வாரமே யுகேந்திரன் அல்லது அனன்யா ராவ் இருவரில் ஒருவர் தான் கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் இருந்தனர். இந்த சீசனில் ஃபர்ஸ்ட் சேவ் சொல்லி விட்டால், அவர்களுக்கு ஃபேன்ஸ் அதிகரித்து விடுவதால் அதை மாற்றியது நல்ல முயற்சியாகவே தெரிகிறது. அடுத்த வாரம் கண்டிப்பாக விசித்ரா, பவாவை பலரும் நாமினேட் செய்வார்கள் என தெரிகிறது. அதில், அதிகப்படியாக பவா சிக்கப் போகிறாரா? அல்லது வேறு யாராவதா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X